Published : 08 Apr 2016 09:51 AM
Last Updated : 08 Apr 2016 09:51 AM

சென்னையில் டாடா ‘டியாகோ’ அறிமுகம்

டாடா மோட்டார்ஸின் புதிய காரான டியாகோ சென்னையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ள இந்தக் கார் குஜராத்தில் உள்ள சனந்த் நகர் ஆலையில் தயாரானதாகும்.

தென்னகத்தில் டாடா மோட் டார்ஸ் தயாரிப்புகளின் விற்பனை மூன்றாவது இடத்தில் இருப்பதால் மும்பையைத் தொடர்ந்து சென்னை யில் இந்தக் கார் அறிமுகம் செய்யப் படுவதாக டாடா மோட்டார்ஸின் திட்டமிடல் மற்றும் திட்ட மேலாண்மைப் பிரிவின் துணைத் தலைவர் கிரீஷ் வாஹ் தெரிவித்தார்.

நடுத்தர ரக கார் பிரிவுகளில் ஹாட்ச்பேக் மாடலில் புதிய வடிவமைப்போடு பல்வேறு சிறப்பசம்ங்களோடு இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் இங்கிலாந்து மற்றும் இத்தாலியில் உள்ள டாடா மோட்டார் ஸின் வடிவமைப்பு மையங்களில் தீவிர ஆய்வின் இறுதியில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டதாக டாடா மோட்டார்ஸின் வடிவமைப்புப் பிரிவின் தலைவர் பிரதாப் போஸ் தெரிவித்தார்.

1,199 சிசி திறனுடன் 1.2 லிட்டர் ரிவோட்ரான் இன்ஜினுடன் இது வெளிவந்துள்ளது. சோதனை ஓட்டத் தின்போது இது ஒரு லிட்டருக்கு 27.28 கி.மீ. தூரம் ஓடியுள்ளது.

நகர நெரிசலில் ஓட்டுவதற்கு ஏதுவாக பன்முக செயல்பாடுகள் கொண்டதாக இந்தக் கார் உருவாக் கப்பட்டுள்ளது. குடும்பத்தி னர் வசதியாக பயணிக்கும் வகை யில் பின் பகுதியில் இடவசதியோடு இருப்பது இதன் சிறப்பம்சம்.

இதில் உள்ள ஹர்மான் மியூசிஸ் சிஸ்டம் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு ஆய்வில் உருவானது. இத னால் மிக இனிமையான ஒரிஜினல் இசையை கேட்டு மகிழலாம்.

தொடர்ந்து 17 நாள் 50 ஆயிரம் கி.மீ. தூரம் ஓட்டிப் பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் ஜூக் கார் ஆப் (செயலி) உள்ளது. இதனால் பயண பாதையை எளிதாக அறிந்து வாகனத்தை செலுத்த முடியும்.

மொத்தம் 5 மாடல்களில் 5 கண் கவர் வண்ணங்களில் இது வெளி வந்துள்ளது. விலை ரூ. 3.31 லட்சம் முதல் ரூ. 5.64 லட்சம் வரையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x