Last Updated : 05 Apr, 2016 09:55 AM

 

Published : 05 Apr 2016 09:55 AM
Last Updated : 05 Apr 2016 09:55 AM

`பனாமா பேப்பர்ஸ்’ விவகாரம்: டிஎல்எப், இந்தியாபுல்ஸ், அப்போலோ டயர்ஸ் பங்குகள் சரிவு

வாஷிங்டனை தலைமையிட மாகக் கொண்டு செயல் படும் புலனாய்வு இதழிய லாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) `பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

இதில் உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துகளை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக் கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது.

டிஎல்எப் உரிமையாளர் கேபி சிங் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 நபர்கள், அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சமீர் கெலாட், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி யின் பெயரும் இந்த பட்டியலில் இருந்தது. அதனால் இந்த நிறுவன பங்குகள் நேற்று சரிவை சந்தித்தன.

டிஎல்எப் நிறுவனப்பங்கு 1.78 சதவீதம் சரிந்து 118.75 ரூபாயிலும், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் பங்கு 2.31 சதவீதம் சரிந்து 631.75 ரூபாயிலும், அப்போலோ டயர்ஸ் பங்கு 1.78 சதவீதம் சரிந்து 171.30 ரூபாயிலும் சரிந்து முடிந்தன.

ஆனால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 130புள்ளிகளும், நிப்டி 45 புள்ளிகளும் உயர்ந்து முடிந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x