Published : 03 Mar 2022 03:27 PM
Last Updated : 03 Mar 2022 03:27 PM

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: உக்ரைன் விவகாரத்தால் தங்கம் விலை நேற்று கடுமையாக உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அதன் தாக்கத்தால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தன. பங்குச்சந்தைகள் சரிவடைந்தன. தங்கம் விலை நேற்று உயர்ந்தது.

இந்தநிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4864- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ. 38912-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.41840-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 70 பைசா உயர்ந்து ரூ 72.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 72,800 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x