Published : 01 Feb 2022 03:52 PM
Last Updated : 01 Feb 2022 03:52 PM

மத்திய பட்ஜெட் 2022 தாக்கம்: விலை உயருபவை, விலை குறைபவை என்னென்ன?

சென்னை: மத்திய பட்ஜெட்டின் எதிரொலியாக குடைகள், ஹெட்போன்கள், ஹியர்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயரும். அதேநேரத்தில், பளபளப்பு செய்யப்பட்ட வைரங்கள், மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்கள் முதலான பொருட்களின் விலை குறையும்.

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் சில வகை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சில வகை பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி மாற்றத்தால் விலை குறையும் / விலை உயரும் பொருள்களின் விவரம்:

விலை உயருபவை:

குடைகள்
கவரிங் நகைகள்
சிங்கிள் அல்லது மல்டிபிள் லவுட்ஸ்பீக்கர்கள்
ஹெட்போன்கள், ஹியர்போன்கள்
மார்ட் மீட்டர்கள்
சோலார் செல்கள்
சோலார் மாட்யூல்கள்
எக்ஸ்ரே எந்திரங்கள்
சில எலெக்ட்ரானிக் பொம்மைகள்

விலை குறைபவை:

ஃப்ரோசன் மஸ்ஸல்ஸ்
ஃப்ரோசன் ஸ்குவிட்ஸ்
கோகோ பீன்ஸ்
அசாஃபோடிடா
மெத்தில் ஆக்கஹால்
அசிடிட்டிக் அமிலம்
பளபளப்பு வைரங்கள்
மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்கள்
ஆடைகள்
பெட்ரோலிய தயாரிப்புகளுக்கான ரசாயன பொருட்கள்
ஸ்டீல் ஸ்கிராப்கள்

பட்ஜெட் அப்டேட்ஸ்:

மத்திய பட்ஜெட் 2022: கிரிப்டோ வரி 30%, வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை | முக்கிய அம்சங்கள் 2

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x