Published : 05 Mar 2016 10:35 AM
Last Updated : 05 Mar 2016 10:35 AM

8-ம் தேதி 3-ம் கட்ட தங்க பத்திரங்கள் வெளியீடு

மூன்றாம் கட்ட தங்க பத்திரங்கள் வரும் மார்ச் 8-ந் தேதி வெளியிடப்படுகிறது. முன்ன தாக வெளியிட்ட இரண்டு கட்டங் கள் மூலம் 1,050 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்துக்கு பரிந்துரை கள் வந்தன.

வரும் மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 14-ம் தேதி வரை தங்க பத்திரங்களுக்கு விண்ணப்பிக் கலாம். இந்த பத்திரங்கள் மார்ச் 29-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கடந்த பட்ஜெட் அறிவிப்பின்படி தங்க பத்திரங்களை விற்கும் போது மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு வழங்கப்படுகிறது. 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்புள்ள தங்கபத்திரங்களை வாங்க முடியும். ஒரு நிதி ஆண்டில் 500 கிராமுக்கு மேல் தங்க பத்திரங்களை வாங்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x