Published : 20 Mar 2016 11:58 AM
Last Updated : 20 Mar 2016 11:58 AM

2017-ம் நிதி ஆண்டு வரை வங்கிகள் இணைப்பு இல்லை?

பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்து மத்திய அரசு கவனமாக இருக்கிறது. வரும் 2017-ம் ஆண்டு முடிவுக்குள் இது குறித்த முடிவு எடுக்கப்படாது என்றே தெரிகிறது.

தற்போது பொதுத்துறை வங்கி களின் எண்ணிகை 27-ஆக இருக் கிறது. இந்த எண்ணிக்கையை 10க்குள் குறைக்க நிதி அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகத் தெரி கிறது. ஆனால் மனித வளமும், வங்கிகளின் கலாசாரமும் வங்கி கள் இணைவதற்கு தடையாக இருப்பதாக தெரிகிறது.

வங்கிகள் இணைப்புத் திட்டம் என்பது நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. இது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. துணை வங்கிகளை தாய் நிறுவனங் களுடன் இணைப்பதில் எந்த பிரச்சி னையும் இருக்காது. அதாவது எஸ்பிஐ வங்கியின் துணை வங்கி களை எஸ்பிஐயுடன் இணைக்கும் போது பெரிய பிரச்சினைகள் உருவாகாது. ஆனால் இதே விஷயத்தை மற்ற வங்கிகளில் கையாளும் போது சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஊழியர் சங்கம் எதிர்ப்பு

வங்கிகள் இணைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். ஒவ் வொரு வங்கிகளின் திறனையும் மேம்படுத்த வேண்டும் என்று அனைந்திந்திய வங்கி ஊழியர் களின் சங்க தலைவர் சி.ஹெச். வெங்கடாசலம் தெரிவித்தார். இந்த துறையில் செய்யப்படும் சீர்தி ருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக மே 25-ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, உள்ளிட்ட ஐந்து துணை வங்கிகள் எஸ்பிஐ வசம் உள்ளன. எஸ்பிஐ வங்கியின் துணை வங்கிகள் இணைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். ஆனால் இது குறித்த முழுவிவரமும் வல்லுநர் குழு தன்னுடைய அறிக்கையை சமர்பித்த பிறகே தெரியவரும்.

2016-17ம் நிதி ஆண்டில் மற்ற வங்கிகள் இணைப்பு குறித்து தகவல் வெளியாகுமா என்று தெரியவில்லை. அடுத்த நிதி ஆண்டிலும் இருக்குமா என்பது சந்தேகமே என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

எண்ணிக்கையில் அதிக வங்கிகள் இருப்பதை விட நிதி நிலையில் வலுவான வங்கிகள் தேவை என்று சில வாரங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x