Published : 08 Mar 2016 10:34 AM
Last Updated : 08 Mar 2016 10:34 AM

இவரைத் தெரியுமா?- ஹியுகோ பாரா

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான ஜியோமி நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடு களுக்கான தலைவர். 2013ல் இந்த நிறுவனத்தில் இணைந்தார்.

சீனாவை தவிர பிற நாடு களில் ஜியோமி நிறுவன தயாரிப்புகளுக்கும் தலைமை பொறுப்பு வகிக்கிறார்.

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதள நிர்வாகத்தில் துணைத் தலைவர், இயக்குநராக பொறுப்பு வகித்தவர். கூகுள் நிறுவனத்தின் மொபைல் பிரிவில் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.

நுயான்சி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் இயக்குநர், தயாரிப்பு மேலாளர், லாபி7 நிறுவனத்தில் தொழில் மேம்பாட்டு பிரிவின் உதவித் தலைவர் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றியவர்.

மாசசூஸெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல் துறையில் இளநிலை மற்றும் மின் பொறியியல் மற்றும் மேலாண்மை அறிவியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x