Published : 03 Nov 2021 05:31 PM
Last Updated : 03 Nov 2021 05:31 PM

மாநிலங்களுக்கு இடையே மின்சார பரிமாற்றம்; புதிய கட்டணங்கள், விதிகள் அறிவிப்பு

மின்சார பரிமாற்ற முறை திட்டம், மேம்பாடு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற கட்டணங்களை பெறுதல் விதிகள் 2021-ஐ மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மின்சார பரிமாற்ற நெட்வொர்க்கை எளிதாக அணுகுவதற்கும், பரிமாற்ற அமைப்பு திட்டத்தை மாற்றியமைக்கவும் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மின்சார பரிமாற்ற முறை திட்டம், மேம்பாடு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற கட்டணங்களை பெறுதல் விதிகள் 2021-ஐ மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதிக கவனம் செலுத்துதல் மற்றும் சந்தைப் முறையின் வளர்ச்சி போன்ற பல துறை முன்னேற்றங்கள் போன்றவை நீண்ட கால அணுகல் அடிப்படையிலான தற்போதைய பரிமாற்ற திட்டமிடல் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியதை அவசியமாக்குகிறது.

மாநிலங்களுக்கு இடையேயான மின்சார பரிமாற்ற அமைப்பில், பொது நெட்வொர்க் அணுகல் என்று அழைக்கப்படும், பரிமாற்ற அணுகல் முறையை இந்த விதிகள் ஆதரிக்கின்றன. இது மாநிலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் அகியவற்றின் தேவைக்கேற்ப மின் பரிமாற்ற திறனைப் பெறுவதற்கும், வைத்திருப்பதற்கும் மற்றும் மாற்றுவதற்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. எனவே, இந்த விதிகள் பரிமாற்றத் திட்டமிடல் செயல்பாட்டில் விவேகம், பொறுப்பு, நேர்மை மற்றும் அதன் செலவுகளைக் கொண்டுவரும்.

தற்போதைய பரிமாற்ற அணுகல் முறையிலிருந்து ஒரு பெரிய மாற்றமாக, மின் நிலையங்கள் அவற்றின் இலக்கு பயனாளிகளைக் குறிப்பிட வேண்டியதில்லை. இந்த விதிகள் மாநில மின் விநியோகம் மற்றும் பரிமாற்ற நிறுவனங்களுக்கு அவற்றின் பரிமாற்றத் தேவைகளைத் தீர்மானிப்பதற்கும் அவற்றை உருவாக்குவதற்கும் அதிகாரம் அளிக்கும். மேலும், மாநிலங்கள் குறுகிய கால மற்றும் நடுத்தர கால ஒப்பந்தங்களிலிருந்து மின்சாரத்தை வாங்க முடியும். அவற்றின் மின் கொள்முதல் செலவை உகந்ததாக மாற்ற முடியும் என மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x