Last Updated : 27 Mar, 2016 02:40 PM

 

Published : 27 Mar 2016 02:40 PM
Last Updated : 27 Mar 2016 02:40 PM

2030-க்குள் 100% மின் வாகனங்கள்: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் அறிவிப்பு

இந்தியாவில் 2030 ம் ஆண்டுக்குள் அனைத்து இடங்களிலும் 100 சதவீதம் எலெக்ட்ரானிக் வாகனங் களை கொண்டுவந்துவிட வேண்டும் என்பதை இலக்காக வைத் துள்ளோம் என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) `யங் இந்தியா’ ஏற்பாடு செய் திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதைக் குறிப் பிட்டுள்ளார். மேலும் அவர் பேசிய தாவது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை தவிர்த்து, எலெக்ட் ரானிக் வாகனங்களை வாங்கு பவர்களுக்கு முன் தவணை இல்லாமல் வாங்குவதற்கு ஏற்ற திட்டங்களை மத்திய அரசு உரு வாக்கி வருகிறது. 2030 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 100 சதவீதம் எலெக்ட்ரானிக் வாகன புழக்கத்தை உருவாக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலக அளவில் 100 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் கொண்ட முதல் நாடாக இந்தியா உருவாகும். இந்த திட்டத்தை நமது சுய நிதியைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யப்படும். மத்திய அரசிடமிருந்து ஒரு ரூபாய்க்கான உதவிகூட தேவையில்லை. அது போல பொதுமக்களும் ஒரு ரூபாய்கூட முதலீடு செய்யத் தேவையில்லை என்று கூறினார். மேலும் இந்த திட்டத்தை விவரித்து பேசிய அமைச்சர் தற்போது இந்த திட்டத்துக்கு வடிவம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

புத்தாக்க முயற்சிகள் இதை சாத்தியப்படுத்தும். இதற்கு தேவை திறந்த மனதுதான். இதை எப்படி கொண்டு செல்வது என்பதை நேர்மையாக நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

இதற்கான திட்டமிடுவதற்காக சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச் சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட வர்கள் இடம் பெறுவார்கள் என்றும், ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த குழுவின் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

பெட்ரோலியப் பொருட்கள் சேமிப்பின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை விட எலெக்ட் ரானிக் கார்களின் ஆதாயம் அதிகம். மின்சாரத்தை பயன்படுத்துவதற் கான செலவு குறைவு. இந்த அளவு கோல்கள் அடிப்படையில் யோசித்து வருவதாகவும், உலக அளவில் பல நாடுகள் இதற்கு முயற்சித்து வந்தாலும் நாம் முன் னிலையில் இருப்பது குறித்து யோசித்து வருகிறோம். இதை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறபோது, இதை செயல்படுத்திய உலகின் மிகப் பெரிய நாடாக நாம் இருப் போம் என்றார். உதாரணமாக எல்இடி விளக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்ய மத்திய அரசு டெண்டர் விட்டது. இதற்கான கொள்முதல் விலையாக ரூ.64.41 என அரசு நிர்ணயம் செய்தது. 2014 ம் ஆண்டில் இந்த விளக்குகளுக்கான சந்தை விலை ரூ.310 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மின் விளக்கு திறன் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் 8.32 கோடி எல்இடி விளக்குகள் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மின் விநியோக நிறுவனங்கள் ஒவ்வொரு விளக்கையும் மாதம் ரூ.10 தவணை யில் பொதுமக்களுக்கு வழங்கின. இந்த திட்டத்துக்கு பிறகு மின் சாரத்தை மிச்சப்படுத்தும் மின் விசிறிகள், ஏசிக்களை சந்தை விலையை விட குறைவாக விநி யோகம் செய்வதற்கும் மின் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

மின் கட்டணங்கள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அமைச்சர், நாட்டில் மின் கட்டணத்தை அதி கரிக்கத் தேவையேயில்லை. தற்போதைய தேவை ஸ்மார்ட் டான வேலை திறன் மற்றும் மின் விநியோகத்துக்கான தொழில் நுட்பம்தான் தேவை. இந்தியா விலுள்ள மின் உற்பத்தி நிலையங் கள் குறைந்த விலையில் மின்சாரத்தை கொடுக்கின்றன. மானிய விஷயங்கள் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x