Published : 01 Mar 2016 09:14 AM
Last Updated : 01 Mar 2016 09:14 AM

கடந்த பத்து வருடங்களில் எட்டு முறை சென்செக்ஸ் வீழ்ச்சி

நேற்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிந்தது. இதனுடன் சேர்த்து கடந்த பத்து வருடங்களில் பட்ஜெட் தினத்தில் 8 முறை பங்குச்சந்தை சரிந்து முடிந்தன. நேற்றைய வர்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-ம் வருடம் சென்செக்ஸ் 0.48 சதவீதம் உயர்ந்தது. மூன்று வருடங்களுக்கு பிறகு 2015-ம் ஆண்டின் பட்ஜெட் சமயத்தில்தான் பங்குச்சந்தை உயர்ந்தது. 2012, 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பங்குச்சந்தை சரிந்தது.

அதற்கு முன்பாக 2010-ம் ஆண்டு பங்குச்சந்தை 1 சதவீத ஏற்றமும், 2011-ம் ஆண்டு 0.69 சதவீதம் ஏற்றமும் அடைந்தது. 2009-ம் ஆண்டு பட்ஜெட் சமயத்தில் சென்செக்ஸ் 5.83 சதவீதம் சரிந்தது. முன்னதாக 2007-ம் ஆண்டு 4 சதவீத சரிவும், 2008-ம் ஆண்டு 1.37 சதவீதம் சரிவும் அடைந்தது. 2006-ம் ஆண்டு 0.85 சதவீதம் பங்குச்சந்தை உயர்ந்து முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x