Published : 04 Oct 2021 07:10 PM
Last Updated : 04 Oct 2021 07:10 PM

தங்க நகைக் கடன் வழங்க இண்டஸ் இந்த் வங்கியுடன் இன்டல் மணி ஒப்பந்தம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தங்க நகைக் கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனமாகிய இன்டல் மணி (Indel Money), தங்க நகைக் கடன் வழங்குவதற்காக இண்டஸ் இந்த் வங்கியுடன் (IndusInd Bank) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம், தங்க நகைக் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தொகையைப் போட்டியாளர்களுக்கு இணையான குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது இன்டல் மணி நிறுவனம்.

இந்த இணை - கடன் கூட்டாண்மை ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் இணைந்து கடன் பெறுபவரின் தகுதி நிலையை வரையறுத்து, அதன் அடிப்படையில் இன்டல் மணி நிறுவனமானது, கடன் பெறுபவரைக் கண்டறிந்து அவருக்கான தங்க நகைக் கடன் தொகையை வழங்கும் சேவையை மேற்கொள்ளும்.

இந்நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தேர்வு செய்வது, அவர்களுக்கான டாக்குமெண்டேஷன் சேவைகளை மேற்கொள்வது, பணத்தைத் திரும்ப வசூலிப்பது உள்ளிட்ட கடன் சார்ந்த அனைத்து சேவைகளையும் கவனித்துக் கொள்ளும்.

இந்த இணை - கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையில் 80 சதவிகிதத்தை இண்டஸ் இந்த் வங்கியும், 20 சதவிகிதக் கடன் தொகையை இன்டல் மணி நிறுவனமும் வழங்கும்.

இன்டல் மணி மற்றும் இண்டஸ் இந்த் ஆகிய இரண்டு நிறுவனங்களும், இந்த இணை - கடன் கூட்டாண்மை ஒப்பந்தத்தால் நாடு முழுவதிலும் உள்ள, பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நகைக் கடன் திட்டத்தின் பலன் கிடைக்கும்.

இதுகுறித்து, இன்டல் மணி நிறுவனத்தின் செயல் இயக்குநரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான உமேஷ் மோகனன் கூறுகையில், "இண்டஸ் இந்த் வங்கியுடனான இந்த ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்படாத கடன் சுமையில் உள்ள - முறையான வகையில், நகைக் கடன் பெற இயலாத அடித்தட்டு மக்களைச் சரியாகக் கண்டறிந்து கடன் வழங்க முடியும். கடன் தேவைப்படுவோரைக் கண்டறிவது, கடனை வசூலிப்பது வரையிலான ஒரு முழு சுழற்சியையும் முறையாகச் செய்வதில் எங்களுக்குள்ள அனுபவத்தையும், தொழில்நுட்பத்தையும் அறிந்து, இண்டஸ் இந்த் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், இதன் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவிலான தொகையைக் கடனாக வழங்க வழி ஏற்பட்டுள்ளது" என்றார்.

இதுகுறித்து, இண்டஸ் இந்த் வங்கியின் இன்க்ளூசிவ் பேங்கிங் குரூப் பிரிவின் தலைவர் ஸ்ரீனிவாஸ் போனம் கூறுகையில், "நாங்கள் நகைக் கடனை வழங்குவதற்காக இன்டல் மணி நிறுவனத்துடன் கை கோப்பது அடுத்தகட்டக் கடன் வழங்கும் இலக்கை நிறைவேற்ற உதவும். இந்நிறுவனமானது, தென் மண்டலங்களில் வலுவான கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் தமது சேவைகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. அனைத்துத் தரப்பினருக்கும் கடன் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற எங்களது நிறுவனத்தின் கொள்கைக்கும், செயல் திட்டத்திற்கும் ஏற்ப இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x