Published : 20 Feb 2016 11:21 AM
Last Updated : 20 Feb 2016 11:21 AM

இவரைத் தெரியுமா? - ரமேஷ் அபிஷேக்

$ மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலர். இந்த பதவியில் இருந்த அமிதாப் காந்த் ஓய்வு பெறுவதையொட்டி இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

$ 1982 வருட பிஹார் மாநிலப் பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி.இதற்கு முன் அமைச்சரவை செயலகத்தின் மேலாண்மை பிரிவின் செயலராக இருந்தவர்.

$ 2011-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள எஃப்எம்சி அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

$ டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியுறவு தொடர்பு மற்றும் கொள்கைகள் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

$ இந்திய உச்சநீதிமன்றத்தின் இ-கமிட்டி பிரிவின் உறுப்பினராக இருந்தவர்.

$ பொதுக் கொள்கைகள், உத்திகள் வகுப்பது, திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றில் சிறந்த அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x