Published : 04 Feb 2016 10:46 AM
Last Updated : 04 Feb 2016 10:46 AM
மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மூ சிக்மா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிறுவனத்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக 2012-ம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறார். நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் பொறுப்பில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.
மோட்டோரோலா ஆய்வகத் தில் ஆராய்ச்சி மற்றும் இன்ஜினீயரிங் துறையில் 8 வருட பணி அனுபவம் கொண்டவர்.
உலகம் முழுவதும் மொபைல் மூலம் குரல்வழி குறுஞ்செய்தி சேவையை பரவலாக்கியதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
செல்போன் தொழில்நுட்பம், தயாரிப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி, சந்தைப்படுத்துதல் மற்றும் புதிய கண்டுபிடிப்பு செயல்பாடுகள் ஆகியவற்றில் சிறந்த அனுபவம் கொண்டவர்.
சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் இளங்கலை பட்டமும் அமெரிக்காவில் உள்ள வேனே (wayne) மாகாண பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT