Published : 11 Feb 2016 10:18 AM
Last Updated : 11 Feb 2016 10:18 AM

காற்று சுத்திகரிக்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்தது புளுஏர்

ஸ்வீடனைச் சேர்ந்த புளுஏர் நிறுவ னம், புதிய காற்று சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் காற்றின் தூய்மையை கண்காணிக்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

புளுஏர் சென்ஸ் பிளஸ் என்ற காற்று சுத்திகரிப்பு இயந்திரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பொருத்திக் கொள்ளலாம். 12 நிமிடங்களில் 200 சதுர அடி பரப்பளவில் காற்றிலுள்ள மாசுக் களை சுத்தப்படுத்துகிறது. புளுஏர் சென்ஸ் செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைத்து இந்த இயந்திரத்தை இயக்கிக் கொள்ள முடியும். இந்த இயந்திரத்தின் விலை ரூ. 45,000.

புளுஏர் அவேர் என்ற காற்றின் தூய்மையை கண்காணிக்கும் இயந்திரத்தின் மூலம் நமது அலுவலகம் மற்றும் வீடுகளில் காற்றின் தரத்தை பற்றியும் தூய்மையை பற்றியும் அறிந்து கொள்ளலாம். காற்றில் கரியமில வாயுவின் அளவு, வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். காற்று தூய்மையாக இருந்தால் நீல நிறத்திலும் காற்றில் மாசு இருந்தால் ஆரஞ்ச் நிறத்திலும் தகவல் தெரிவிக்கிறது. இந்த கண்காணிக்கும் இயந்திரத்தின் விலை ரூ. 25,000.

``உலகம் முழுவதும் 3.5 பில்லியன் மக்கள் மாசுள்ள காற்றையே சுவாசித்து வருகின் றனர். இந்தியாவில் சுவாசக் கோளாறால் அதிகம் பேர் உயிரி ழந்து வருகின்றனர். அதிகரிக்கும் மாசடைந்த காற்றிலிருந்து விடுபட்டு தூய்மையான காற்றை சுவாசிக்கவே இந்தியாவில் இந்த இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்’’ என்று புளுஏர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பெங்கட் ரிட்ரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x