Published : 06 Jul 2021 09:06 AM
Last Updated : 06 Jul 2021 09:06 AM

வருமானவரி படிவங்கள் 15CA/15CB மின்னணு தாக்கல் கடைசி தேதி மேலும் நீட்டிப்பு

வருமானவரி படிவங்கள் 15CA/15CB-ன் மின்னணு தாக்கலுக்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாவது:

வருமானவரி சட்டம், 1961-ன்படி, 15CA/15CB படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது, வரிசெலுத்துவோர், வெளிநாட்டு பணம் பெற்றிருந்தால், 15CA படிவத்தை, பட்டய கணக்காளர் சான்றிதழுடன் 15CB படிவத்தை, அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் நகலை தாக்கல் செய்வதற்கு முன்பாக, மின்னணு தாக்கல் இணையளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

இந்த படிவங்களை www.incometax.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில், வரி செலுத்துவோர் சில பிரச்சினைகளை சந்தித்ததால், இந்த படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் 2021 ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக கைப்பட தாக்கல் செய்யலாம் என நேரடி வரி வாரியம் முடிவு செய்திருந்தது.

அந்த தேதியை 2021 ஜூலை 15ம் தேதி வரை நீட்டிக்க தற்போது நேரடி வரி வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் வரி செலுத்துவோர், மேலே கூறிய படிவங்களை, ஜூலை 15ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.

வெளிநாட்டு பணம் பெற்றதற்கு, இந்த படிவங்களை ஜூலை 15-ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளும்படி, அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆவண அடையாள எண் உருவாக்குவதற்காக, இந்த படிவங்களை புதிய மின்னணு-தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி பின்னர் வழங்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x