Published : 28 Dec 2015 09:26 AM
Last Updated : 28 Dec 2015 09:26 AM

2015-ம் ஆண்டில் இந்திய பொருளாதார செயல்பாடு மனநிறைவை அளிக்கிறது: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

2015-ம் ஆண்டில் இந்திய பொரு ளாதாரம் சிறப்பாக செயல்பட் டுள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். உலக அளவில் இந்த வருடத் தில் பொருளாதாரம் ஏற்ற இறக்க மாகவும் இடர்பாடுகளுடன் இருந் தாலும் இந்திய பொருளாதாரத்தின் செயல்பாடு மன நிறைவை அளிக் கிறது என்று மேலும் தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தாலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7-7.5 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் வளர்ச்சியடையும். ஆண்டு இறுதியில் திரும்பி பார்க்கும் போது செயல்பாடுகள் மன நிறைவாக இருக்கிறது.

நேர்முக வரிகளை சீரமைப்பதற்கு சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உட்பட பல மாற்றங்களைச் செய்யும் போது இந்தியாவில் தொழில் செய்வதற்கு மேலும் எளிதாக இருக்கும். இதை நிறைவேற்றிய பிறகு மூன்று முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த போகிறேன். உள்கட்டமைப்புக்கு அதிக நிதியை ஒதுக்குவது, சமூக உள்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்குவது, ஒதுக்கப்பட்ட துறையான நீர்பாசன வசதிக்கு அதிக நிதியை ஒதுக்குவது போன்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த இருக்கிறேன்.

வெறுப்பு மனப்பான்மை இந்திய வாழ்வியல் முறைகளில் ஒன்று. நீங்கள் மற்ற தகவல்கள் மீது கேள்வி எழுப்பலாம். ஆனால் உண்மையான வருவாய் உயர்வு குறித்த கேள்வியை நீங்கள் கேட்க முடியாது.

உலக அளவில் சிக்கல்

சீன பொருளாதாரம் மந்தமாக இருந்ததும் கமாடிட்டிச் சந்தை பலவீனமாக இருந்ததும் உலக அளவில் சிக்கலை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் பருவ மழை குறைவு மற்றும் தனியார் முதலீடுகள் குறைவு போன்ற சிக்கலை சந்திக்க நேரிட்டது. இதனால் இந்திய பொருளாதாரத்தை மேலாண்மை செய்வது எங்களுக்கு மிகப் பெரிய சிக்கலாக இருந்தது. தனியார் துறை முதலீடுகள் குறைவான நிலையிலேயே இருக்கிறது. ஏனெனில் தனியார் துறை மிக அழுத்தமான நிலையில் இருக்கிறது. தேவை குறைந்து உபரியான உற்பத்தி நிலைதான் தனியார் துறையில் நிகழ்ந்து வருகிறது.

எண்ணெய் விலை குறைந்ததன் மூலம் சேமிக்கப்படும் நிதியை கிராமப்புறங்களுக்கு சாலை அமைத்தல், நெடுஞ்சாலை, ரயில்வே போன்ற துறைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. துறைமுக பகுதிகளில் தனியார் முதலீடுகளை ஈர்க்க இலக்கு வைத்துள்ளோம்.

உலகளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் இந்திய பொருளாதாரம் 7-7.5 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது 8 சதவீத இலக்குக்கு குறைவானதுதான். ஆனால் பருவமழை சீராக இருந்திருந்தால் எங்களது இலக்கை நெருங்கி ருப்போம்.

சேவை துறையில் வலுவான நிலை தொடர்கிறது. இந்த வருடம் மேலும் தொழில் துறை உற்பத்தி குறியீடு அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. இது மறைமுக வரி வசூலில் பிரதிபலித்துள்ளது.

பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட் டுள்ளது. ரெபோ விகிதம் இந்த வருடத்தில் 1.25 சதவீதம் குறைக்கப் பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு எப்பொழுதும் சிறப்பாக இருக்கிறது. மற்ற பொருளாதாரங்களை ஒப்பிடும் போது டாலர் நிலையான மதிப்பில் இருக்கிறது. பொருளாதாரத்தை பொறுத்த வரை இந்த வருடம் மிக சவாலான வருடமாக இருந்தது. விலை சரிவால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது அதுமட் டுமல்லாமல் உலக வர்த்தகமும் சுருங்கிவிட்டது.

மேலும் அந்நிய நேரடி முதலீடுக்கான (எப்டிஐ) விதி களை மாற்றுவது மற்றும் தொழில் தொடங்க ஊக்குவிப்பது போன்ற சீர்திருத்தங்களை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகிறது. பழைய வரி விதிப்பு பிரச்சினை களையும் ஒன்றன் பின் ஒன்றாக சரிசெய்து வருகிறது.

இந்திய பொருளாதாரம் வேக மாக வளர்ந்து வரும் பொருளா தாரம். அதிகமான நிதி வருவாயை கட்டுமான உள்கட்டமைப்பு, சமூக உள்கட்டமைப்பு மற்று நீர்பாசனம் ஆகிய திட்டங்களுக்கு முதலீடு செய்ய உதவும்.

நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கு ஒதுக்கப் படும் வரி வருவாய் 42 சதவீத மாக கட்டுப்படுத்தப்படும் நான் ஏற்ெகனவே கூறியிருந்தேன். அடுத்த வருடம் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ள தற்கு கூடுதலாக ரூ.1,02,000 கோடி ஒதுக்கவேண்டும். அதனால் நான் எப்பொழுதும் என்னுடைய கையிருப்பு வளங்களை தொடர்ந்து எண்ணிக் கொண்டிருக் கிறேன். உலக நாடுகளுக்கு இணையாக நேரடி வரி விதிப்பு முறைகளை கொண்டு வர வேண்டும். இந்த வருடம் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை 2016-ம் ஆண்டு கொண்டு வருவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x