Published : 25 Dec 2015 11:07 AM
Last Updated : 25 Dec 2015 11:07 AM

தொடர்ந்து 5-வது ஆண்டாக ரூபாய் மதிப்பு சரிவு

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ரூபாய் மதிப்பு சரிந்து முடிவடைந்தது. இந்த வருடம் ரூபாய் மதிப்பு புதிய வீழ்ச்சியைத் தொட்டாலும், சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் கரன்ஸியாகவும் ரூபாய் மதிப்பு இருக்கிறது. ஒரு டாலர் 65-70 ரூபாய் என்பது இயல்பு வர்த்தக நிலையாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டின் இறுதியில் ஒரு டாலர் 63.03 ரூபாயாக இருந்தது. இந்த வருடம் ஐந்து சதவீதம் சரிந்து 66.21 ரூபாயாக இருக்கிறது. இந்த வருடம் இன்னும் நான்கு வர்த்தக நாட்கள் இருக்கும் சூழ்நிலையில் ஒரு டாலர் 66-67 ரூபாய்க்குள் முடியும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வருடம் முழுவதும் அமெரிக்கா வட்டி விகிதம் உயர்த் தும் நடவடிக்கை, சீனாவின் மந்த நிலை, அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிந்தது. டாலருக்கு நிகரான யூரோ மதிப்பு 16% சரிந்தது, இந்தோனேஷியா கரன்ஸி அதிகம் சரிந்தது.

இன்று விடுமுறை

கிறிஸ்துமஸ் காரணமாக இன்று பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை ஆகும். தொடர்விடுமுறை காரண மாக நேற்றைய வர்த்தகத்திலும் மந்தநிலை நிலவியது. சென்செக்ஸ் 11 புள்ளிகள் சரிந்து 25838 புள்ளி யிலும், நிப்டி 5 புள்ளிகள் சரிந்து 7861 புள்ளியிலும் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x