Published : 22 Dec 2015 09:16 AM
Last Updated : 22 Dec 2015 09:16 AM

ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனங்களில் முதல் 50-க்குள் டாடா மோட்டார்ஸ்

ஆராய்ச்சிக்காக அதிகம் முதலீடு செய்யும் நிறுவனங்களை ஐரோப்பிய கமிஷன் பட்டியலிட் டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய நிறுவன மான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் 50 இடங்களுக்குள் வந்தி ருக்கிறது.

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது. சாம்சங், மைக்ரோசாப்ட், இன்டெல், நொவார்டீஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வருடம் 104-வது இடத்தில் இருந்தது. இந்த வருட பட்டியலில் 49-வது இடத்தை பிடித்திருக்கிறது. இருந்தாலும் இந்த நிறுவனம் ஆராய்ச்சிக்காக செய்யும் முதலீடுகளில் பெருமளவு தன்னு டைய இங்கிலாந்து துணை நிறுவனமான ஜாகுவர் லாண்ட் ரோவரில் முதலீடு செய்கிறது.

ஆராய்ச்சிக்காக அதிகம் முதலீடு செய்யும் 2,500 நிறுவ னங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதில் இந்தியாவை சேர்ந்த 26 நிறுவனங்கள் இடம் பிடித் துள்ளன. இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த 829 நிறுவனங்களும், ஜப்பானை சேர்ந்த 360, சீனாவை சேர்ந்த 301, தாய்வானை சேர்ந்த 114, ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த 80 நிறுவனங்கள் இடம் பிடித் துள்ளன. ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 608 நிறுவனங்கள் உள்ளன.

டாக்டர் ரெட்டீஸ், எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லுபின், சன் பார்மா, சிப்லா, இன்போசிஸ், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், வொக்கார்ட், காடிலா ஹெல்த்கேர், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ, பிஹெச்இஎல், பிரமல் என்டர்பிரைசஸ், விப்ரோ, ஹெச்சிசி, அலோக் லேலாண்ட், அப்போலோ டயர்ஸ், டிசிஎஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், போர்ஸ் இந்தியா, ஹெச்சிஎல் டெக், க்ளென்மார்க் மற்றும் ஹெச் அண்ட் எம் ஆகிய இந்திய நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் கூகுள் 6 வது இடத்தில் உள்ளது. இதற்கடுத்து, ரோச், ஜான்சன் அண்ட் ஜான்சன், டொயோடா மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வருடம் 104-வது இடத்தில் இருந்தது. இந்த வருட பட்டியலில் 49-வது இடத்தை பிடித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x