Published : 21 Apr 2021 19:03 pm

Updated : 21 Apr 2021 19:03 pm

 

Published : 21 Apr 2021 07:03 PM
Last Updated : 21 Apr 2021 07:03 PM

ரூ.36,000-ஐக் கடந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

gold-price-exceeds-rs-36-000-what-is-the-situation-today

சென்னை

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து, ஒரு பவுனுக்கு ரூ.36 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.


இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.4,511க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.36,088க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38,960க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

1 கிராம் வெள்ளி ரூ.74.10க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.74,100 ஆக உள்ளது.

தவறவிடாதீர்!



Gold priceRs.36000ரூ.36 ஆயிரம்தங்கம் விலைஇன்றைய நிலவரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x