Published : 17 Dec 2015 11:05 AM
Last Updated : 17 Dec 2015 11:05 AM

இவரைத் தெரியுமா? - தருண் ராய்

# நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச விளம்பர நிறுவனமான ஜெ வால்டர் தாம்சன் நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டும் மார்ச் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

# 2002 முதல் 2008-ம் ஆண்டு வரை ஜெ வால்டர் தாம்சன் நிறுவனத்தின் மும்பை பிரிவிற்கு நிர்வாக பங்குதாரராக இருந்தவர்.

# 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வேர்ல்டுவைட் மீடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

# 1988-ம் ஆண்டு ஜெ வால்டர் தாம்சன் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த இவர் அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவிற்கு பொது மேலாளர் பொறுப்பிலும் இருந்தவர்.

# விளம்பரத் துறையிலும் ஊடகத் துறையிலும் 25 வருட பணி அனுபவம் கொண்டவர்.

# இந்திய பத்திரிகைகள் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

# லண்டன் பொருளாதார கல்வி நிறுவனத்தில் தொழில் மேலாண்மை பிரிவில் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x