Last Updated : 19 Nov, 2015 09:24 AM

 

Published : 19 Nov 2015 09:24 AM
Last Updated : 19 Nov 2015 09:24 AM

ஏற்றுமதியை அதிகரிக்க 3% வட்டிச் சலுகை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு ஏற்றுமதியாளர் களுக்கு 3 சதவீத வட்டிச் சலுகையை அறிவித்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 2,700 கோடி கூடுதல் செலவு பிடிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று நடை பெற்ற பொருளாதார விவகாரங் களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

2015 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏற்றுமதி செய்யப்படும் பொருள் களுக்கு இத்தகைய வட்டிச் சலுகை அளிக்கப்படும். இந்த சலுகை ஐந்து ஆண்டுகளுக்கானது. இந்த சலுகை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சலுகை காரணமாக ஆண்டுக்கு ரூ. 2,500 கோடி முதல் ரூ.2,700 கோடி வரை கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள் ளது. திட்டம் சாரா செலவுகளை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் ரூ. 1,625 கோடி நிதியம் உள்ளது. இதன் மூலம் இந்த வட்டிச் சலுகையை சமாளிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து ஏற்றுமதிகளுக்கும் இந்த வரிச் சலுகை பொருந்தும். இந்த சலுகை மூலம் நடுத்தர, குறுந்தொழில்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வேளாண் சார்ந்த பொருள் ஏற்றுமதி, உணவு பதப்படுத்தல் பொருள் ஏற்றுமதி ஆகியன அதிகரிக்கும் என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

முந்தைய காங்கிரஸ் அரசு இத்தகைய வட்டிச் சலுகையை ரத்து செய்துவிட்டது. இதனால் நாட்டின் ஏற்றுமதியானது குறைந் துவிட்டது. இந்த சலுகை மூலம் ஏற்றுமதியாளர்கள் கட்டுபடியாகும் விலையில் கடன் பெற முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து 11 மாதங்களாக நாட் டின் ஏற்றுமதி சரிந்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில் இத்தகைய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோல் இந்தியா

கோல் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ரூ. 20 ஆயிரம் கோடி கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலைப்படி 10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 21,137.71 கோடி கிடைக்கும்.

பொதுத்துறை பங்கு விலக்கல் நடவடிக்கையாக கோல் இந்தியா நிறுவன பங்குகளை இந்த நிதி ஆண்டுக்குள் விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது கோல் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 79.65 சதவீத பங்குகள் உள்ளன.

பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 69,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ. 41 ஆயிரம் கோடியும், எஞ்சிய ரூ. 28,500 கோடி உத்தி சார்ந்த விற்பனை மூலமும் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் 20 பொதுத் துறை நிறுவன பங்குகளை விற் பனை செய்ய அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது. இதில் கோல் இந்தியா, ஆயில் இந்தியா, நால்கோ நிறுவனங்களின் 10 சதவீத பங்கு களை விற்பதென முடிவு செய்யப் பட்டுள்ளது. இது தவிர என்டிபிசி, ஓஎன்ஜிசி, பிஹெச்இஎல் உள்ளிட்ட நிறுவனங்களில் 5 சதவீத பங்கு களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x