Last Updated : 30 Nov, 2015 09:12 AM

 

Published : 30 Nov 2015 09:12 AM
Last Updated : 30 Nov 2015 09:12 AM

விரிவாக்கத்திற்காக பதஞ்சலி ரூ.1,000 கோடி முதலீடு: பாபா ராம்தேவ் அறிவிப்பு

யோகி பாபா ராம்தேவ் நடத்திவரும் பதஞ்சலி ஆயுர்வேதிக் என்ற எப்எம்சிஜி நிறுவனம் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.1,000 கோடியை அடுத்த ஆண்டு முதலீடு செய்ய வுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஏற்றுமதி மற்றும் இ-காமர்ஸ் துறைகளில் கவனம் செலுத்தப் போவதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

ஹரித்வாரை சார்ந்த இந்நிறுவனம் தென் இந்தியாவில் தங்களுடைய தொழிலை மேம் படுத்துவதற்காக மெகா புட் வொர்க் உடன் இணைந்து தென் இந்தியாவில் உற்பத்தி ஆலையை தொடங்க இருக்கிறது.

பதஞ்சலி ஆயுர்வேதிக் நிறுவனத்தின் பொருட்கள் நாடு முழுவதும் 15,000 கடை கள் உள்ளன. பால், துரித உணவுகள், குழந்தை பராமரிப்பு பொருட்கள், இயற்கை அழகு சாதனப் பொருட்கள் ஆகியவை விற்கப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் அதிக பொருட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.

கடந்த நிதி ஆண்டில் பதஞ்சலி நிறுவனத்தின் விற்பனை 200 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. 2015-16 நிதியாண்டில் 5,000 கோடி ரூபாயை எட்டும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது

இது குறித்து பாபா ராம்தேவ் கூறுகையில்,

2016 ஆம் ஆண்டு நாங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக 1,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறோம். ஏற்கனவே வங்கிகள் 500 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளது. மேலும் நிறைய நிதிகளை வழங்கவும் தயாராக இருக்கிறார்கள். அதனால் முதலீடு பற்றி எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

பால் பொருட்கள் பிரிவை பொறுத்தவரை, பதஞ்சலி நிறுவனம் பால் பவுடரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மேலும் சீஸ் மற்றும் சாக்லேட் மீதும் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் இயற்கை அழகு சாதனப் பொருட்களை செளந்தர்யா என்ற பிராண்டிலும் குழந்தைகள் பராமரிப்பு பொருட்களை சிஷு கேர் என்ற பிராண்டிலும் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரி வித்தார்.

மேலும் விற்பனையை விரிவு படுத்த இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக அனைத்து நவீன சில்லறை கடைகளிலும் கிடைக் குமாறு மாற்ற இருக்கிறோம். எங்களது பொருட்கள் ஏற்கனவே பிக் பஜார், ரிலையன்ஸ் பிரஷ் போன்ற கடைகளில் இருக்கிறது.

இதே போன்று மற்ற பெரிய சில்லறை கடைகளிலும் விரைவில் கிடைக்குமாறு செய்யபோகி றோம்.

மேலும் நாங்கள் 2,000-3,000 சதுர அடியில் எங்களுடைய பொருட்களை விற்பதற்கென்று பதஞ்சலி மெகா ஸ்டோரை விரைவில் ஆரம்பிக்க இருக் கிறோம்.

இ-காமர்ஸ் துறையை பொறுத்தவரை நாங்கள் சிறிய அளவில் இயங்கி வருகிறோம். அடுத்த ஆண்டு மார்ச் முதல் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் பரிசீலனை செய்துவருகிறோம் என்று பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x