Published : 15 Feb 2021 07:38 PM
Last Updated : 15 Feb 2021 07:38 PM

பருவ காலம் தவறிய தட்பவெப்ப நிலை; பயிர் பாதிப்பிற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு; மத்திய அரசு விளக்கம்

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் 2018 – 19 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ரூ. 2,624.7 கோடி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அதன் மூலம் 18.5 லட்ச விவசாயிகள் பயனடைந்தனர்.

பருவ காலம் தவறிய தட்பவெப்ப நிலை காரணமாக ஏற்படும் பயிர்களின் பாதிப்பு பேரிடர் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் பேரிடர்கள் என்று கருதப்படும் இயற்கை பேரிடர்கள் மாநிலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டால் மற்றும் பேரிடர்கள் என்று உள்துறை அமைச்சகம் அறிவிக்காத நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரண உதவியை வழங்க மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10 சதவீதத்தை பயன்படுத்திக்கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர்களால் பயிர்கள் நாசமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக விளைச்சலின் அடிப்படையில் பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை காரிப் 2016 முதல் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் விளைச்சலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பாதிப்புகளுக்கு விரிவான காப்பீடு வழங்கப்படும்.

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் 2018 – 19 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ரூ. 2,624.7 கோடி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அதன் மூலம் 18.5 லட்ச விவசாயிகள் பயனடைந்தனர். இதே ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரூ. 0.5 கோடி காப்பீடு தொகை வழங்கப்பட்டது. 2019 – 20 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ரூ. 1,002.6 கோடி காப்பீடு தொகை வழங்கப்பட்டு, அதன் மூலம் 11.3லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்.

நாட்டில் மொத்தமாக 2018- 19 ஆம் ஆண்டில் ரூ. 27, 934 கோடி காப்பீடு தொகை வழங்கப்பட்டு 219.9 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2019-20 ஆம் ஆண்டு ரூ. 23,645 கோடி, காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு 211.6 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். 2020- 21 ஆம் ஆண்டில் ரூ. 312 கோடி, காப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டதன் மூலம் 5.1 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x