Published : 18 Nov 2015 09:20 AM
Last Updated : 18 Nov 2015 09:20 AM

இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 40 கோடியாக உயரும்

வரும் டிசம்பர் இறுதிக்குள் இணையம் பயன்படுத்துபவர் களின் எண்ணிக்கை 40.20 கோடி யாக உயரும் என்று இந்தியா இன்டர்நெட் மற்றும் மொபைல் சங்கத்தின் (ஐஏஎம்ஏஐ) அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 49 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்தியாவில் இணையம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி நபர்களில் இருந்து 10 கோடி நபர்களாக அதிகரிக்க 10 வருடங்கள் ஆனது. ஆனால் 10 கோடியில் இருந்து 20 கோடியாக 3 வருடங்களில் உயர்ந்துள்ளது.

மேலும் 30 கோடியில் இருந்து 40 கோடியாக ஒரே வருடத்தில் உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 46.2 கோடியாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உலகில் இணையம் பயன்படுத் துபவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. சீனா முதல் இடத்திலும் (60 கோடி நபர்கள்) அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

மொபைல் மூலம் இணையம் பயன்படுத்தும் நகரவாசிகளின் எண்ணிக்கை 65 சதவீதம் உயர்ந்து 19.7 கோடியாக இருக் கிறது. கிராமப்புற இந்தியர்களின் எண்ணிக்கை 8 கோடியாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை நகர்ப்புறத்தில் 21.9 கோடியாகவும், கிராமப்புறத்தில் 8.7 கோடி யாகவும் உயரும் என்று கணிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x