Published : 20 Nov 2015 09:24 AM
Last Updated : 20 Nov 2015 09:24 AM

இவரைத் தெரியுமா?- அர்விந்த் பாலி

வீடியோகான் டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2008 ஆம் ஆண்டிலிருந்து இப்பொறுப்பில் இருந்து வருகிறார்.

2005ஆம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை போலந்தில் உள்ள வீடியோகான் குளோபல் சிபிடி மற்றும் கிளாஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர்.

வீடியோகான் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு, தயாரிப்பு மற்றும் பயன்பாடுகள், ஆலை மற்றும் செயல்பாடுகள் ஆகிய பிரிவுகளில் தலைவராக 30 வருடங்களுக்கு மேல் பணி அனுபவம் கொண்டவர்.

புதிய பொருட்களை அறிமுகப்படுத்துதல், சர்வதேச விற்பனை மற்றும் செயல்பாடு, புதிய தொழில்களை வளர்ச்சியடைய செய்வது போன்றவற்றில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

1994 ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்தில் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவிற்கு தலைவராகச் சேர்ந்தவர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இண்டர்நேஷனல் பிஸினஸ் மற்றும் பைனான்ஸ் துறையில் எம்பிஏ பட்டமும், பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டமும் முடித்துள்ளார்.

விலங்குகள் நலன் மற்றும் சமூக உரிமைகளில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x