Last Updated : 08 Sep, 2015 10:00 AM

 

Published : 08 Sep 2015 10:00 AM
Last Updated : 08 Sep 2015 10:00 AM

ஓய்வூதிய திட்டத்தால் அரசுக்கு ரூ.16,000 கோடி செலவாகும்: ஹெச்எஸ்பிசி அறிக்கை தகவல்

ராணுவத்தில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் (ஓஆர்ஓபி) திட்டத்தை அமல்படுத்துவதால் அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக ரூ. 16 ஆயிரம் கோடி செலவாகும் என்று ஹெச்எஸ்பிசி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.

இதனால் அதிக அளவில் ஓய்வூதியத்துக்கான தொகை தேவைப்படும். அத்துடன் 2014 ஜூலையிலிருந்து முன் தேதி யிட்டு இதை அமல்படுத்த அரசு ஒப்புக் கொண்டுள்ளதால் நிலுவைத் தொகையையும் அளிக்க வேண்டியிருக்கும்.

இது அரசின் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்கும் இலக்கை எட்ட முடியாமல் செய்யும். மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று ஹெச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.

இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதமாகும்.

ராணுவ ஓய்வூதியத்துக்கு ரூ. 10 ஆயிரம் கோடி கூடுதலாகவும், இரண்டு ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை அளிப்பதற்கு ரூ. 12 ஆயிரம் கோடியும் தேவைப்படும் என தெரிவித்துள்ளது.

2015-16ம் நிதி ஆண்டில் மட்டும் அரசுக்கு ரூ. 16,000 கோடி தேவைப்படும் என்று ஹெச்எஸ்பிசி தலைமைப் பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி தெரிவித்தார்.

செலவைக் கட்டுக்குள் வைக்கும் அரசின் முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், இது போன்ற அறிவிப்புகளை செயல் படுத்துவதால் செலவு அதிகரிக் கத்தான் செய்யும்.

சமீபத்தில் வங்கிகளுக்கு அடுத்த 4 ஆண்டுகளில் ரூ. 70 ஆயிரம் கோடி முதலீடு செய்யப் போவதாகவும் நடப்பாண்டில் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்தது. இதுவும் செலவை அதிகரிக்கத்தான் செய்யும்.

மேலும் நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ. 69,500 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இருந்தாலும் இது நிறைவேற்ற முடியாத இலக்கு என்று குறிப்பிட்டுள்ளது.

இருந்தபோதிலும் மானியத் துக்கான ஒதுக்கீடு குறைவது, வரி வருவாய் அதிகரிப்பு, அரசுக்கு கிடைக்கும் ஈவுத் தொகை அதிகரிப்பு உள்ளிட்டவை பற்றாக்குறையை போக்க ஓரளவு உதவலாம். வரி வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் பற்றாக் குறை இலக்கான 3.9 சதவீதத்தை எட்ட முடியும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

அரசால் பற்றாக்குறையைக் கட்டுக்குள் அதாவது நிர்ணயித்த இலக்கிற்குள் வைக்க முடியுமா என்று இப்போதே தீர்மானிக்க இயலாது என்று ஹெச்எஸ்பிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிதிச்சுமை அதிகரிக்கும்

ராணுவத்தினருக்கு அரசு அளித்துள்ள சலுகையால் நடப்பு நிதி ஆண்டில் அரசு நிர்ணயித்துள்ள பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் இலக்கை எட்ட முடியாது என்று நிதிச் சேவையில் முன்னணியில் உள்ள நொமுரா குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் அரசின் இறக்குமதி செலவு குறைந்தது மற்றும் மானிய ஒதுக்கீடு குறைந்தது ஆகிய காரணங்கள் சாதகமாக இருந்தபோதிலும் இப்போதைய செலவினங்களால் இலக்கை எட்ட முடியாது என்று நொமுரா தெரிவித்துள்ளது.

ராணுவத்தினருக்கான ஓய்வூ தியம் அதிகரித்துள்ளது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அளிப்பது, பொதுத்துறை வங்கி களின் நிதிவளத்தைப் பெருக்க கூடுதலாக முதலீடு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசின் இலக் கிலிருந்து விலகிச் செல்வதாக இருக்கும் என்று அது சுட்டிக் காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x