Last Updated : 30 Jul, 2020 09:04 AM

 

Published : 30 Jul 2020 09:04 AM
Last Updated : 30 Jul 2020 09:04 AM

2018-19-ம் ஆண்டு வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு 3-வது முறையாக நீட்டிப்பு


2018-19ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தவற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது

இதுகுறித்து மத்திய நேரடிவரிகள் வாரியம்(டிபிடிடி) நேற்று இரவு வெளியிட்டஅறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

2018-19-ம் ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது.

இது மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30-ம் தேதிவரை அவகாசம் வழங்கப்படுகிறது. வருமானவரிச்சட்டத்தின் படி, 80சி, 80டி 80ஜி பிரிவில் முதலீடூ, மருத்துவக்காப்பீடு, நன்கொடை ஆகியவற்றை கணக்கில் காட்டி கழிவுபெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானவரி கணக்குகளைத் தாக்கல் செய்ய 3-வது முறையாக அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. முதலில் மார்ச் 31 முதல் ஜூன் 30 என்று நீட்டித்தது. அதன்பின் ஜூலை 31-ம் தேதியாகவும், இப்போது செப்டம்பர் 30-ம் தேதியாகவும் நீட்டித்துள்ளது.

இந்த காலக்கெடுவுக்குள் வருமானவரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வோர் 2018-19-ம் நிதியாண்டுக்கான அசல் மற்றும் திருத்தப்பட்ட ரிட்டன் கணக்குகள் இரண்டையும் தாக்கல் செய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x