Published : 05 May 2020 04:06 PM
Last Updated : 05 May 2020 04:06 PM

கரோனா தடுப்பு: முன்கூட்டியே ஓய்வூதியம் வழங்கிய இபிஎப்;  வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.764 கோடி  விநியோகம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். நாடெங்கும் அமலில் இருக்கும் கரோனா ஊரடங்கால் ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஓய்வூதியத்தை முன்னதாகவே அளிக்க, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் 135 கள அலுவலகங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன.

எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்து, இந்த அலுவலகத்தின் அலுவலர்களும், பணியாளர்களும், இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் வங்கிகளுக்கு ரூ.764 கோடியை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த காலத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியத்தை வரவு வைப்பதை உறுதிப்படுத்துமாறு அனைத்து வங்கிக் கிளைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x