Last Updated : 29 Apr, 2020 04:35 PM

 

Published : 29 Apr 2020 04:35 PM
Last Updated : 29 Apr 2020 04:35 PM

ஏப்ரல், மே மாதங்களில் சம்பளம் கிடையாது: விமானிகளிடம் கூறிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் தன் விமானிகளிடம் ஏப்ரல், மே மாத சம்பளம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. சரக்கு விமானம் ஓட்டுபவர்களுக்கு மட்டும் எவ்வளவு மணி நேரம் பறந்தார்களோ அதனடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமான செயல்பாட்டு தலைவர் குருசண அரோரா கூறும்போது, “இப்போதைய நிலையில் 16% விமானங்கள்தான் பறக்கின்றன. 20% விமானிகள்தான் பணி நிமித்தமாக பறந்து வருகின்றனர், இதனை 5 கார்கோ விமானம் மூலமாகவும் நம் பயணிகள் விமானத்தையும் பெரும்பாலும் சரக்கு விமானமாகவும் பயன்படுத்துவதன் மூலம் செய்து வருகிறோம்” என்றார்.

ஸ்பைஸ் ஜெட்டிடம் 116 பயணிகள் மற்றும் 5 சரக்கு விமானங்கள் உள்ளன. மார்ச் 25 முதல் நாடு ஊரடங்கு லாக்டவுனில் உள்ளதால் வர்த்தக விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பைல்ட்களிடம், “ஏப்ரல், மே மாத சம்பளங்கள் வராது, கார்கோ விமானிகளுக்கு பறக்கும் நேர அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்” என்றார்.

எனினும் வரும் வாரஙளில் விமான சேவைகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x