Published : 19 Mar 2020 08:58 AM
Last Updated : 19 Mar 2020 08:58 AM

நாட்டின் வளர்ச்சி 5.2%ஆக குறையும்

மும்பை:

நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.2 சதவீத அளவுக்குக் குறையும் என்று சர்வதேச தரச்சான்று நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ் அண்ட் பி) நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னர் வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதம் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் வளர்ச்சி விகிதம் 2.9 சதவீதமாகவும், ஜப்பானின் வளர்ச்சி விகிதம் -1.2 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் சீனாவின் வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாகவும், ஜப்பானின் வளர்ச்சி விகிதம் -0.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் தீவிரம் மற்றும் அதிலிருந்து நாடுகள் மீளும் கால அளவைப் பொறுத்தே வளர்ச்சி விகிதம் இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியங்களின் வளர்ச்சி விகிதம் பாதியாகக் குறையும் என்றும் இது சர்வதேச பொருளாதாரத்தில் 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நிரந்தர வருவாய் இழப்பு 40,000 கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x