Published : 31 Jan 2020 03:07 PM
Last Updated : 31 Jan 2020 03:07 PM

பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?- முக்கிய அம்சங்கள்

தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் பொருளாதார ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளனர். இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் பொருளாதாரம் மற்றும் சந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

* உலக அளவில் பொருளாதார பாதிப்புகளால் இந்தியாவின் வளர்ச்சியிலும் எதிரொலித்துள்ளது.

* முதலீடுகள் வேகமாக வந்து சேராததால் தொழில்துறை மந்தம் காணப்படுகிறது.

* நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2020- 21-வது நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும்.

* நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும். இது முந்தைய கணிப்பான 7 சதவீதத்தை விட குறைவாகும்.

* புதிய தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்.

* அதுபோலவே சொத்துக்கள் பதிவு செய்வது, வரி செலுத்துவது, ஒப்பந்தம் போன்றவைகளின் நடைமுறைகளையும் எளிதாக்க வேண்டும்.

* வெங்காயம் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை பயனளிக்கவில்லை.

* உள்கட்டமைப்பு துறையில், தனியார் உதவியுடன் அதிக அளவிலான முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.

* வரும் நிதியாண்டில் வரி வருவாய கணக்கிடப்பட்ட தொகையை விட குறைவாகவே இருக்கும்.

* அதிகரித்தால் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பதற்கு வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x