Last Updated : 29 Jan, 2020 06:52 PM

 

Published : 29 Jan 2020 06:52 PM
Last Updated : 29 Jan 2020 06:52 PM

மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமனுக்கு காத்திருக்கும் சவால்கள்

இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு சவால்களும் காத்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியப் பொருளாதார சூழல்மந்தமாக இருப்பதால் பொருளாதார நடவடிக்கைகளையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், நடப்பு நிதியாண்டில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவான 5 சதவீதமாக வீழச்சியடைந்து.

குறிப்பாக உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை மோசமாகச் செயல்பட்டதாலும், வேலையின்மை அதிகரிப்பாலும் வளர்ச்சி குறைந்ததுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்த நிலையில், 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் சூழலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு பாதைக்கும், வளர்ச்சிப்பாதைக்கும் கொண்டுவரும் போக்கில் மத்திய அரசு தீவிரமாக இயங்கி வருகிறது.

இந்தநிலையில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பொருளாதார சிக்கல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடியும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் தொடர்பான பணிகளை வெறும் மேற்பார்வையிடாமல் பிரதமர் மோடி நேரடியாக களத்தில் இறங்கி பணிகளைக் கவனித்து வருகிறார்.

இந்தநிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு சவால்களும் காத்திருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசுக்கு வர வேண்டிய வருவாய் சுமார் ரூ.3 லட்சம் கோடியாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பற்றாக்குறை மதிப்பீடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைய வாய்ப்புள்ளது.

கூடுதல் வரி திரட்ட நஷ்டத்தில் இயங்கும் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
குறிப்பாக ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம்.

உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மின்னணு, மின் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் கைவினைப்பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில் தனிநபர் வருமான வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் அதற்கான வாய்ப்பு மிகக்குறைவே என்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள்.

கார்ப்பரேட் வரி குறைப்பு மற்றும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை.

சாலைகள், ரயில்வே மற்றும் கிராமப்புற நலன்களுக்காக அரசு கூடுதலாக செலவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x