Published : 08 Jan 2020 02:39 PM
Last Updated : 08 Jan 2020 02:39 PM

அமெரிக்கா - ஈரான் மோதல்: தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?

இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்பொழுதும் அலாதி பிரியம் உண்டு. காலம் காலமாக தங்கம் சேமிப்பது என்பது உயர் பொருளாதார நிலைக்கு ஒப்பிடப்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்வது விவேகமான முடிவாக கருதகப்பட்டது.

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்க அரசு, ஈரானின் முக்கிய தளபதிகளில் ஒருவரான காசிம் சுலைமானியை ஏவுகனை தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றச் சூழல் அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினமே உலகளாவிய பொருளாதார சந்தையில் மாற்றம் ஏற்பட்டது.

இதனால் பங்குசந்தை, தொழில்துறை உட்பட பல்வேறு விதமான முதலீடுகளை தவிர்த்து விட்டு முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது.ஆனால் தற்போதுள்ள சூழலில், தங்கத்தில் முதலீடு செய்வது உகந்ததா என்ற கேள்வி எழுகிறது.

தங்கம் முதலீடா?

* தங்கத்தை பொறுத்தவரையில் பலவகையான முதலீடுகளை ஒப்பிடுகையில் அதன் விலை உயர்வு, குறைவை பல்வேறு காரணிகளும் முடிவு செய்கின்றன.

தங்கத்தை வாங்கும்போது மொத்தமாக வாங்குவதும், விற்பதையும் விட, கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதும், விற்பதும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

* தங்கத்தை பெரிய அளவில் வாங்கி வைத்து அதற்கு பின் விலை ஏறாவிட்டாலும் வருத்தம் ஏற்படும். விற்ற பிறகு விலை ஏறினாலும் நஷ்டம் ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்கும்போதும், விற்கும்போது லாபமோ, நஷ்டமோ எதுவும் பெரிய அளவில் இருக்காது. அதேசமயம் ஒரே சீராக இருக்கும். எனவே தொடர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது மிகச்சிறந்தது என்கின்றனர் ஆலோசகர்கள்.

தங்கத்தை ஆபரம் தவிர நாணயங்களாக வாங்கலாம். இவ்வாறு வாங்கும்போது செய்கூலி, சேதாரம் போன்ற பிரச்சினைகள் குறைவு.

* ஆனால் தங்க நாணயங்களை வைத்து கடன் வாங்குவதில் சில சிக்கல் எழுகின்றன.

* ETF எனப்படும் முறையில் ஆன்லைனில் வாங்கலாம். இவ்வாறு வாங்கும்போது, பாதுகாப்பது, வாங்குவது, விற்பது எல்லாம் எளிது.

* விலையிலும் வெளிப்படை தன்மை இருக்கும். இதிலும் செய்கூலி, சேதாரம் போன்ற பிரச்சினைகள் இருக்காது. சர்வதேச விலை நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

* இதுமட்டுமல்லாமல் தங்கத்தின் அடிப்படையில் பல்வேறு பாண்டுகள், முதலீட்டு திட்டங்களும் உள்ளன. தங்கத்தின் விலை அடிப்படையில் இந்த திட்டங்களில் வளர்ச்சியும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x