Published : 08 Nov 2019 10:06 am

Updated : 08 Nov 2019 10:06 am

 

Published : 08 Nov 2019 10:06 AM
Last Updated : 08 Nov 2019 10:06 AM

ஊழியர்களை குறைக்கும் கட்டாயத்தில் ஐடி துறை: இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி கருத்து

it-department-forced-to-cut-staff

பெங்களூரு

ஐடி நிறுவனங்கள் அதன் இடை நிலை ஊழியர்களின் எண்ணிக் கையை குறிப்பிட்ட அளவில் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இன்ஃபோசிஸ் நிறு வனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.

தற்போதைய நிலையில், லாபத்தை தக்கவைக்க வேண்டு மெனில் தேவையில்லாத ஊழியர் களை குறைப்பதை தவிர தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்தார்.

உலக அளவில் தொழில் நுட்பக் கட்டமைப்பு அடுத்த நிலைக்கு மாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் அதற்கு ஏற்ற ஊழியர் கள் மட்டுமே நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் புதிய தொழில் நுட் பங்களில் பரிச்சயம் இல்லாத ஊழி யர்களின் எண்ணிக்கையை குறைக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. அதன் பகுதியாக 5 முதல் 10 சதவீதம் அளவில் அதன் இடைநிலை ஊழியர்களை குறைக்க வேண்டிய நிலையில் ஐடி நிறுவனங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘தற்போது டிஜிட்டல் துறை அதிக அளவில் வளர்ந்து வருகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர் கள் குறைந்த விலையில் சேவையை எதிர்பார்க்கின்றனர் விளைவாக நிறு வனங்கள் தங்களை கூடுதல் செயல் திறன்மிக்கதாகவும், தேவையில் லாத செலவை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. அதனால் புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்த ஊழியர்களைத் தவிர, பிற ஊழியர் களின் எண்ணிக்கை நிறுவனங் களுக்கு சுமையாக உள்ளன. எனவே அவர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளன’ என்று கூறினார்.

ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து அவர் கூறியபோது, ‘தற்போது இந்தியா பொருளாதார ரீதியாக நெருக்கடி நிலையை சந்தித்து வந்தாலும், அது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற் படுத்தவில்லை. இந்த சூழ் நிலையை ஐடி நிறுவனங்கள் இன் னும் கவனமாக கையாண்டால் அடுத்த வருடத்திலும் ஐடி நிறுவனங் களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்’ என்றார்.

சமீபத்தில் காக்னிசன்ட் நிறுவனம் 7,000 ஊழியர்களை குறைக்க உள்ளதாக அறிவித்தது. அது ஐடி ஊழியர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், மேலும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்க வாய்ப்பிருப்பதாக தகவல் கள் வெளிவருகின்றன.


ஊழியர்கள்குறைக்கும் கட்டாயம்ஐடி துறைஇன்ஃபோசிஸ்முன்னாள் தலைமை நிதி அதிகாரிஐடி நிறுவனங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author