Published : 05 Nov 2019 09:55 am

Updated : 05 Nov 2019 09:55 am

 

Published : 05 Nov 2019 09:55 AM
Last Updated : 05 Nov 2019 09:55 AM

ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து ஆலோசனை: டாடா குழும தலைவர் தகவல்

air-india-sales

மும்பை

ஏர் இந்தியாவை முழுமையாக தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்குவது தொடர் பாக நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக டாடா குழுமத்தின் தலை வர் என்.சந்திரசேகரன் தெரிவித் துள்ளார்.

அரசு விமான சேவை நிறுவன மான ஏர் இந்தியா தொடர் நஷ்டத் தில் இயங்கிக் கொண்டிருப்பதால் அதை விற்க அரசு கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறது. முன்னதாக ஏர் இந்தியா வின் 76 சதவீத பங்குகளை விற்று விட்டு, 24 சதவீத பங்குகளை மட்டும் தன் வசம் வைத்துக்கொள்ள அரசு திட்டமிட்டது. ஆனால், அதற்குப் பெரும்பாலான நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளாததால், ஏர் இந்தியா வின் பங்கு விற்பனை நடவடிக்கை தோல்வியடைந்தது. இதையடுத்து அரசு 100 சதவீத பங்குகளை விற்று விடும் முடிவுக்கு வந்தது. தற்போது ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் தீவி ரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏர் இந்தியா ஜேஆர்டி டாடாவால் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் 1932-ல் தொடங்கப்பட்டது. சுதந் திரத்துக்குப் பிறகு அது அரசு வசம் வந்தது. எனவே தற்போது ஏர் இந்தியா விற்பனைக்கு வருவதால்

டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டு கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து டாடா குழுமத் தலைவர் தனது பேட்டியில் கூறியதாவது, “ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து விஸ்தாரா முடிவு செய்ய வேண் டுமே தவிர, டாடா சன்ஸ் அல்ல. எனவே தற்போது இதுகுறித்து தீர்மானமான முடிவு எதையும் என்னால் கூற முடியாது. ஆனால், டாடா குழுமத்தின் விமான சேவை தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கிறது. ஜெட் ஏர்வேஸை வாங்குவதற்கான முயற்சிகளில் இருந்ததால் ஏர் இந்தியா குறித்து எந்த முடிவுக்கும் வரவில்லை. தற்போது ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து அதிகாரிகள் குழுவினரிடம் ஆலோசனை செய்ய இருக்கிறேன். டாடா குழுமத்தின் குழு ஏர் இந்தியாவை மதிப்பீடு செய்யும். எதுவாயினும் தற்போது எந்த முடிவும் தெரிவிக்க முடியாது” என்று அவர் கூறினார்.

டாடா குழுமம் தற்போது விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து விமான சேவையில் ஈடுபட்டுவருகிறது. ஏர் இந்தியா வின் உள்நாட்டு விமான சேவை பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஏர் இந்தியாவை வாங்குவதுஏர் இந்தியா நிறுவனம்டாடா குழும தலைவர் தகவல்தனியாருக்கு விற்க அரசு முடிவுஎன்.சந்திரசேகரன் தகவல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author