Last Updated : 09 Jul, 2015 09:57 AM

 

Published : 09 Jul 2015 09:57 AM
Last Updated : 09 Jul 2015 09:57 AM

ஆட்குறைப்பை அதிகரிக்கும் மைக்ரோசாப்ட்

முன்னணி மென்பொருள் நிறுவன மான மைக்ரோசாப்ட் ஆட்குறைப்பு நடவடிக்கையை தீவிரமாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆட்குறைப்பு நடைபெற உள்ளது என்று `தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய அளவில் நடக்க உள்ள இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில், மேலும் 18,000 ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படலாம். ஹார்டுவேர் மற்றும் அதைச் சார்ந்த பணியாளர்கள் இதனால் வேலையிழக்கக்கூடும் என அந்த செய்தி தெரிவிக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன் துறை சார்ந்த பணியாளர்கள் வேலையிழக்கலாம். கடந்த ஆண்டுதான் நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் மிகப்பெரிய அளவில் பணியாளர்களை குறைத்திருந்தது. தற்போது சுமார் 14 சதவீத பணியாளர்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் உலக அளவில் 1,18,000 பணியாளர்கள் வேலையிழக்க உள்ளனர்.

இந்த செய்தியை மைக்ரோசாப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் பிராங் எக்ஸ் சா மறுத்துள்ளார்.

கடந்த மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆன்லைன் விளம்பர நிறுவனமான ஏஓஎல் நிறுவனத்தை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது. அதிக வருமானம் தராத நிறுவனங்களை கைவிட மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.

மொபைல் விண்டோஸ்

மொபைல் விற்பனையை பொறுத்தவரை மைக்ரோசாப்ட் தனக்கான சந்தையை இன்னும் பிடிக்கவில்லை. விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதர முன்னணி ஆப்பரேட்டிங் சிஸ்டங்களான கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் போல சந்தையை பிடிக்க முடியவில்லை

இந்த நிலையில் கடந்த மாதம் மைக்ரோசாப்ட் ஸ்மார்ட்போன் உற்பத்தியின் துணை தலைவராக இருந்த ஸ்டீபன் எலோப் மற்றும் நிறுவனத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த விவ காரத்தை கவனித்து வருபவர்கள் நோக்கியா நிறுவனத்தை கையகப் படுத்தியன் மூலம் மைக்ரோசாப்ட் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மதிப்பு பல பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளதாக பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆட்குறைப்பு தொடர் பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்திகள் எதுவும் வெளியிட வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x