Published : 01 Oct 2019 08:46 PM
Last Updated : 01 Oct 2019 08:46 PM

ஐ.எம்.எஃப். இந்திய செயல் இயக்குநராக பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா நியமனம்

புதுடெல்லி, பிடிஐ

ஐ.எம்.எஃப் என்று அழைக்கப்படு பன்னாட்டு நிதியத்தின் இந்திய செயல் இயக்குநர் பதவியில் பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அதிகாரப் பூர்வ உத்தரவு தெரிவிக்கிறது.

இவரது நியமனத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பணிநியமன கமிட்டி ஒப்புதல் தெரிவித்துள்ளதையடுத்து பல்லா நியமிக்கப்பட்டார். இவர் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

பல்லா பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் இருந்தார், பிறகு டிசம்பர் 2018-ல் அவர் தன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

இவர் பொருளியலில் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக முனைவர் பட்டம் பெற்றவர். டெல்லி பொருளாதாரப் பள்ளியில் செயல் இயக்குநராகப் பணியாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x