Published : 14 Sep 2019 09:10 AM
Last Updated : 14 Sep 2019 09:10 AM

டிஜிட்டல் மயமாக்கத்தில் தமிழகம் முன்னிலை: தமிழக இ-கவர்னன்ஸ் சிஇஓ தகவல்

சென்னை

இந்திய அளவில், டிஜிட்டல் மயமாக்கத்தில் தமிழகம் முன்னிலை வகித்துவருகிறது. தமிழக அரசு தொடர்பான செயல்பாடுகள், சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற ஐஎஸ்ஏசிஏ-யின் நிகழ்வில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

தகவல் அமைப்புகள் தொடர்பான தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் ஐஎஸ்ஏசிஏ என்றுஅழைக்கப்படுகிறது. ஐஎஸ்ஏசிஏ- யின் சென்னைப் பிரிவு, டிஜிட்டல் மயமாக்கத்தின் போக்குகள் குறித்து நிபுணர்கள் விவாதிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் சமூக மாற்றத்தில் டிஜிட்டல் மயமாக்கத்தின் பங்களிப்புகள், புதிய சவால்கள், அடுத்தகட்ட நகர்வுகள் என டிஜிட்டல் மயமாக்கத்தின் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, மிஸ்ரா பேசியதாவது: டிஜிட்டல் மயமாக்கம் உலக நடைமுறையை ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை அரசுத் துறை செயல்பாடுகள், சேவைகள் எனஅனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுத் துறை சார்ந்த பணிகள் எளிமையாகி உள்ளன.

அனைத்து தகவல்களும் முறையாக ஆவணப்படுத்தப்படுகின்றன. அதே சமயம் டிஜிட்டல் மயமாக்கத்தின்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் அதிகம் உள்ளன. தரவுகளை முறையாக பாதுகாப்பது அவற்றில் ஒன்று. தமிழகம் அதற்கேற்ற வகையில் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.அரசு சேவைகளில் ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்
பட்டு வருகின்றன. இந்திய அளவில் அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்
ளது என்று அவர் தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு
கள் குறித்தும் அவர் பேசினார்.

அவரைத் தொடர்ந்து காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குநர் ராம்குமார் ராமமூர்த்தி பேசியபோது, ‘தற்போது மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தகவல்களாக மாற்றப்படுகின்றன. அனைத்து தகவல்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே புதிய புதிய சேவைத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், நினைத்துப் பார்த்திராத அளவில் உலகம் டிஜிட்டல் மயமாகி உள்ளது. கல்வி, மருத்துவம், வங்கி, வியாபாரம் என உலகின் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் இணையம் தொடர்பாக முறையான கட்டுப்
பாடும், பாதுகாப்பும் அவசியமாகிறது. தகவல்களை கையாளும் நிறுவனங்களுக்கு கூடுதல் பொறுப்பு வேண்டும்’ என்று அவர் தெரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x