Last Updated : 09 Jul, 2015 10:04 AM

 

Published : 09 Jul 2015 10:04 AM
Last Updated : 09 Jul 2015 10:04 AM

மீண்டும் ஹோண்டா ‘ஜாஸ்’

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான ஜாஸ் மாடல் கார்களை அந்நிறுவனம் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மூன்றாம் தலைமுறை மாடலாக பல்வேறு மேம்படுத்தப்பட்ட சிறப் பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த ரகக் காரின் விலை ரூ. 5.3 லட்சம் முதல் ரூ. 7.29 லட்சம் வரையாகும்.

ஏற்கெனவே சந்தையில் உள்ள மாருதி சுஸுகி ஸ்விப்ட், ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகியவற்றுக்கு போட்டியாக இந்த கார் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையில் இது வெளிவந்துள்ளது. பெட்ரோல் கார் விலை ரூ. 5.3 லட்சம் முதல் ரூ. 7.29 லட்சம் வரையாகும். டீசல் காரின் விலை ரூ. 6.49 லட்சம் முதல் ரூ. 8.59 லட்சமாகும்.

ஆட்டோமேடிக் கியர் மாற்றம் வசதி கொண்ட காரின் விலை ரூ. 6.99 லட்சம் முதல் ரூ. 7.85 லட்சம் வரையாகும். அனைத்து விலைகளும் டெல்லி விற்பனையக விலையாகும்.

ஹோண்டா காரின் விற் பனையை அதிகரிக்க மேம்படுத்தப் பட்ட ஜாஸ் வரவு உதவும் என்று ஹோண்டா மோட்டார் இந்தியா நிறு வனத்தின் தலைவர் மற்றும் தலை மைச் செயல் அதிகாரி கஸ்டுஷி இனோயு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிரீமியம் ரக ஹாட்ச்பேக் மாடல் கார் தயாரிப்பில் மீண்டும் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தின் இணை தலைவர் நொரியாகி அபே தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கார் உற்பத்தியில் நான்காமிடத்தில் உள்ளது ஹோண்டா. உலக அளவில் இந்நிறுவனம் விற்பனை யில் 30 சதவீதம் ஆசிய பிராந்தியத் திலிருந்து கிடைப்பதாக அபே தெரிவித்தார்.

2013-ம் ஆண்டு வரை இந்நிறு வனம் இந்தியாவில் ரூ. 3 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது. ராஜஸ்தானில் தபுகரா எனுமிடத் தில் இந்நிறுவன ஆலை அமைந் துள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஜாஸ் மாடல் காரில் 90 சதவீத அளவுக்கு உள்ளூர் பாகங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தபுகரா உற்பத்தி ஆலையில் ஜாஸ் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ரூ. 380 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 1.20 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலை இப்போது ஆண்டுக்கு 1.80 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் மட்டும்தான் ஜாஸ் மாடல் கார்களில் டீசலில் ஓடக் கூடிய கார்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. உலகின் வேறெந்த பகுதியிலும் டீசல் ஜாஸ் கார்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாஸ் கார் முதன் முதலில் 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. அப்போது இதன் விலை ரூ. 7 லட்சமாகும். பின்னர் 2013-ல் ரூ. 1.6 லட்சம் குறைக்கப்பட் டது. இரண்டாம் தலைமுறை ஜாஸ் வாகனங்களில் 23 ஆயிரம் காரை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

உலகம் முழுவதும் 55 லட்சம் ஜாஸ் மாடல் கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. உலகம் முழுவதும் 11 இடங்களில் உற்பத்தியாகும் இந்த கார் 75 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிறுவனத் தயாரிப்புகளான பிரையோ, அமேஸ், செடான் சிட்டி, மொபிலியோ ஆகியன குறிப்பிடத்தக்க மாடல்களாகும். கடந்த நிதி ஆண்டில் இந்நிறு வனத்தின் வாகன விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. இதன் மூலம் மொத்தம் 1,89,062 வாகனங் களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x