செய்திப்பிரிவு

Published : 09 Sep 2019 20:41 pm

Updated : : 09 Sep 2019 20:41 pm

 

மந்தநிலை- ஜுவெல்லரி தொழிற்துறை கடும் பாதிப்பு; வேலையிழப்பு ஏற்படலாம்: ஷங்கர் சென்

jewellery-industry-hit-by-recession-job-losses-likely-shaankar-sen

கொல்கத்தா, பிடிஐ

ஜுவெல்லரி தொழிற்துறையில் மந்த நிலை காரணமாக வேலையிழப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அனைத்திந்திய கற்கள் மற்றும் நகைத் தயாரிப்பு உள்நாட்டு கவுன்சில் அச்சம் தெரிவித்துள்ளது.

இறக்குமதித் தங்கத்துக்கு சுங்கவரியைக் குறைக்கவும், ஜிஎஸ்டியைக் குறைக்கவும் இந்தத் தொழிற்துறை கோரிக்கை வைத்துள்ளது.

2019-20 மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி தங்கத்துக்கான சுங்கவரி 10% லிருந்து 12.5% ஆக அதிகரிக்கப்பட்டது. ஜிஎஸ்டி 3% ஆக இருக்கிறது, ஆனால் மதிப்புக் கூட்டு வரி இருந்த போது இது 1% ஆக இருந்தது.

இந்நிலையில் அனைத்திந்திய கற்கள் மற்றும் நகைத் தயாரிப்பு உள்நாட்டு கவுன்சில் துணைத்தலைவர் ஷங்கர் சென் கூறும்போது, “ஜுவெல்லரி தொழிற்துறை மந்தநிலையைச் சந்தித்து வருகிறது, காரணம் தேவைக்குறைபாடு. இதனையடுத்து திறன் மிக்க கைவினைஞர்கள் வேலைஇழப்பை எதிர்நோக்குகின்றனர்” என்றார்.

மேலும் அவர் கோரிக்கை வைக்கும் போது, “சுங்கவரி 12.5%லிருந்து 10% ஆகக் குறைக்கப்பட வேண்டும், ஜிஎஸ்டி 1% ஆக நிர்ணையிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம்” என்றார்.
அதிக சுங்கவரியினால் தங்கம் கடத்தல் அதிகரிக்கும் என்கிறார் ஷங்கர் சென். இதனுடன் சேர்த்து பிற கோரிக்கைகள் பற்றி சென் குறிப்பிடும்போது, நகைகள் வாங்குவதில் இ.எம்.ஐ. முறையும் தேவை ஏனெனில் நகைகள் சொத்தின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டதையடுத்து இ.எம்.ஐ முறை உதவும். அதே போல் பான்கார்டு கட்டாயமாகும் நகைக்கொள்முதல் வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

Jewellery industry hit by recession job losses likely: Shaankar Senமந்தநிலை- ஜுவெல்லரி தொழிற்துறை கடும் பாதிப்பு; வேலையிழப்பு ஏற்படலாம்: ஷங்கர் சென்அனைத்திந்திய கற்கள் மற்றும் நகைத்தயாரிப்புத் தொழிற்துறை கவுன்சில்ஷங்கர் சென்பொருளாதார மந்தநிலை
Popular Articles

You May Like

More From This Category

More From this Author