செய்திப்பிரிவு

Published : 28 Aug 2019 10:00 am

Updated : : 28 Aug 2019 10:01 am

 

ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட போஸ்டர் ரூ.17.90 லட்சத்துக்கு ஏலம்

steve-jobs-signature-posted

சான்பிரான்சிஸ்கோ

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட போஸ்டர் ரூ. 17.99 லட்சத்துக்கு ஏலம் போனது. 8 ஆண்டுகளுக்கு முன் புற்று நோயால் உயிரிழந்த ஸ்டீவ் ஜாப்ஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

மிகச் சிறந்த தொழில்நுட்பவி யலாளராகவும், சிறந்த நிர்வாகத் தலைவராகவும் அவர் கருதப்படு கிறார். ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பு கள் ஆண்டுதோறும் மிகச் சிறந்த எதிர்பார்ப்பை தோற்றுவிப்பதற்குக் காரணமே இவர் உருவாக்கிய படைப்புகள்தான். நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமாக இவரது பங்களிப்பு மிகவும் அளப்பரியது. பொதுவாக ஸ்டீவ் ஜாப்ஸின் கையெழுத்து ஆப்பிள் நிறுவனம் சார்ந்த தயாரிப்புகளில் இடம்பெற்றிருக்கும். மாறாக பிக்ஸர் தயாரித்த டாய் ஸ்டோரி போஸ்டரில் அவர் கையெழுத்து இடம்பெற்றுள்ளது. இதனால் அதிக விலைக்கு ஏலம் போனது.

பிக்ஸர் நிறுவனத்தின் அதிக பங்குகளை ஸ்டீவ் ஜாப்ஸ் வைத் திருந்ததோடு அந்நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். 1995-ம் ஆண்டு இந்நிறுவனம் தயாரித்த டாய் ஸ்டோரி எனும் முதல் திரைப்படம் சர்வதேச அளவில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

ஸ்டீவ் ஜாப்ஸ்ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்து17.90 லட்சத்துக்கு ஏலம்ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட போஸ்டர்ஆப்பிள் நிறுவனம்Steve jobs signature
Popular Articles

You May Like

More From This Category

More From this Author