Published : 26 Aug 2019 09:09 AM
Last Updated : 26 Aug 2019 09:09 AM

அரசின் சலுகைகள் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்கும்: இந்திய தொழில் துறை கூட்டமைப்பு கருத்து

புதுடெல்லி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு கள் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டு சமநிலைக்குக் கொண்டுவரும் என இந்திய தொழில்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் சரிவில் இருப் பதால் முன்னணி நிறுவனங்கள் பலவும் வேலைபறிப்பு நடவடிக்கை களை எடுத்துவந்தன. ஆட்டோ மொபைல் துறை பெரும் விற்பனை சரிவைச் சந்தித்தது. இதனால் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் ஏற் பட்டுவந்தது. இதற்கெல்லாம் தீர்வு காணும் முயற்சியாக அரசு சமீபத் தில் சில சலுகைகளை அறிவித்தது. இந்தச் சலுகைகளால் இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வரும் என சிஐஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐஐ தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் கூறியபோது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு தொழில் துறையினருடன் நடத்திய ஆலோசனைகளின்படி தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு அறிவிப்புகளை வெளியிட் டுள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர் கள், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை என அனைவரும் பலனடையும் வகையில் இந்த அறிவிப்புகள் உள்ளன. பல் வேறு துறைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பல்வேறு கோணத் தில் திட்டமிட்டு இவை எடுக்கப் பட்டுள்ளன. முன்னணி நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் போர், சர்வதேச சந்தையில் மந்த நிலை போன்றவற்றால் இந்தியச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. இத் தகைய சூழலில் இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக் கும் வகையில் அரசு சலுகை களை அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. இந்தச் சலுகைகளால் விரைவில் பொருளாதாரம் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x