Published : 04 Jul 2015 10:15 AM
Last Updated : 04 Jul 2015 10:15 AM

ரூ.33,441 கோடிக்கு கடல் உணவு ஏற்றுமதி: தூத்துக்குடியில் உயர்வு

நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி கடந்த ஆண்டு 10 சதவீதம் உயர்ந் துள்ளது. 2014-2015ம் நிதியாண் டில் இந்தியாவில் இருந்து மொத் தம் ரூ.33,441.61 கோடி மதிப்பிலான 10,51,243 டன் கடல் உணவு பொருள் கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்திய கடல் உணவு ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையத்தின் தூத்துக்குடி மண்டல அலுவலகம் சார்பில் 2014-15-ம் ஆண்டில் ஏற்றுமதியான கடல் உணவு பொருள்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீதம் வளர்ச்சி

2014-15ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 10,51,243 டன் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட் டுள்ளன. இதன் மதிப்பு 551.11 கோடி டாலராகும். ரூபாய் மதிப் பில் ரூ. 33,441.61 கோடியாகும்.

இது கடந்த 2013-14-ம் ஆண்டை விட அளவில் 6.86 சதவீதமும், ரூபாய் மதிப்பில் 10.69 சதவீதம் அதிகமாகும். 2013-14ல் ரூ.30,213.26 கோடி மதிப்புள்ள 9,83,756 டன் கடல் உணவு பொருட் கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள முக்கிய கடல் உணவு பொருள் பதப்படுத்தப்பட்ட இறால் ஆகும். 2014-15ம் ஆண்டில் 3,57,505 டன் பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 22,468.12 கோடியாகும்.

இறாலுக்கு அடுத்தபடியாக ரூ. 3778. 50 கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட மீன் 3,09,434 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை துறைமுகம் வழியாக ரூ.2,458. 20 கோடி மதிப்பிலான 46,671 டன் கடல் உணவு பொருட் கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அளவில் 15.58 சதவீதம், ரூபாய் மதிப்பில் 9.29 சதவீதமும் குறைவாகும்.

தூத்துக்குடியில் உயர்வு

தூத்துக்குடி துறைமுகம் வழியாக 2014-15ல் ரூ. 2,328.27 கோடி மதிப்பிலான 42,203 டன் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட அளவில் 6.72 சதவீதமும், ரூபாய் மதிப்பில் 7.63 சதவீதமும், டாலர் மதிப்பில் 7.06 சதவீதமும் அதிகமாகும் என, கடல் உணவு ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x