Published : 09 Jul 2015 09:48 AM
Last Updated : 09 Jul 2015 09:48 AM

2,095 டன் சர்க்கரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

மத்திய அரசு 2,095 டன் சர்க்கரை யைக் கூடுதலாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுத்திருக்கிறது. குறைந்த விலையில் ஏற்றுமதி என்ற அடிப்படையில் இந்த ஏற்றுமதி இருக்கும், என்றும் வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை கூடுதலாக ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் இதனை தெரிவித்தார்.

குறைந்த விலை சர்க்கரையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக 8,424 டன் சர்க்கரை இந்த முறையை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனுக்கு 10,000 டன் அளவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

நடப்பு 2014-15 ஆண்டில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) 2.8 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யபடும் என்று இந்திய சர்க்கரை மில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டு 2.43 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.

நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 30 லட்சம் டன் சர்க்கரை உபரியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x