Published : 18 Jun 2015 10:13 AM
Last Updated : 18 Jun 2015 10:13 AM

முதல் தலைமுறை பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம்: வெல்த் எக்ஸ் அறிக்கை

மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ் முதல் தலை முறை பணக்காரர்கள் பட்டியலில் உலக அளவில் முதலிடத்தில் உள் ளார். இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு மொத்தம் 86 பில்லியன் டாலர்கள் என்று ஆய்வு நிறுவன மான வெல்த் எக்ஸ் அறிக்கை கூறியுள்ளது. இந்த நிறுவனம் உலக அளவில் நிறுவனங்களின் சொத்து மதிப்பை ஆய்வு செய்வதில் முக்கிய நிறுவனமாகும்.

இவரை அடுத்து வாரன் பஃபெட் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 70.1 பில்லியன் டாலர்கள். ஸ்பெயினைச் சேர்ந்த அமென்சியோ ஒர்டிஹா 65 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் லாரி எலிசன் (51 பில்லியன் டாலர்கள்), இங்க்வர் கம்பேர்ட் (48.1 பில்லியன் டாலர்கள்), ஜெப் பிஸோஸ் (39.8 பில்லியன் டாலர்கள்), கார்லஸ் ஸ்லிம் (35.4 பில்லியன் டாலர்கள்), மார்க் ஸூகர்பெர்க் (35.3 பில்லியன் டாலர்கள்) வாங் ஜியன்லின் (35.2 பில்லியன் டாலர்கள்) மற்றும் மைக்கேல் புளூம்பர்க் (33.7 பில்லியன் டாலர்கள்) இடம் பெற்றுள்ளனர்.

வெல்த் எக்ஸ் வெளியிட்டுள்ள உலகின் முதல் தலைமுறை பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்க நிறுவனங்களின் நிறுவனர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். 14 அமெரிக்க தொழிலதிபர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே 514.2 பில்லியன் டாலராக இருக்கிறது. நார்வே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட இவர்களது மதிப்பு அதிகமாக உள்ளது.

இந்தியாவைச் சேந்தவர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. துறைவாரியாக எடுத்துக் கொண்டாலும் ஐடி துறை சார்ந்தவர்கள்கூட இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் கூகுள் நிறுவனர்கள் லாஜி பேஜ்,செர்கி பிரின் மற்றும் அலிபாபா தலைவர் ஜாக் மா போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x