Last Updated : 01 Jun, 2015 10:00 AM

 

Published : 01 Jun 2015 10:00 AM
Last Updated : 01 Jun 2015 10:00 AM

கடந்த நிதி ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கடந்த நிதி ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மொத்த நிகரலாபம் ரூ.23,566 கோடியாகும். பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யை பின்னுக்கு தள்ளி ரிலையன்ஸ் முதல் இடம் பிடித்துள்ளது.

ஓஎன்ஜிசி நிறுவனம் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. டாடா குழுமத்தை சேர்ந்த டிசிஎஸ் நிறுவனம் அதிக நிகரலாப பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது.

2014-15-ம் நிதி ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.19,852 கோடி. இதே காலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.18,334 கோடி. ஓஎன்ஜிசி நிறுவனம் 2013-14-ம் நிதி ஆண்டில் அதிக நிகரலாபம் சம்பாதித்த நிறுவன மாக இருந்தது. அதே காலத்தில் ரூ.26,506 கோடி அளவுக்கு ஓஎன்ஜிசியின் நிகர லாபம் இருந்தது.

2005-06-ம் நிதி ஆண்டில் ரிலை யன்ஸ் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.9,398 கோடியாக இருந்தது. அதே சமயத்தில் ஓ.என்.ஜிசி.யின் நிகரலாபம் ரூ.15,397 கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகரலாபம் ஆண்டுக்கு 10.75 சதவீத அளவுக்கு வளர்ச்சி அடைந்துவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x