Last Updated : 29 May, 2015 09:51 AM

 

Published : 29 May 2015 09:51 AM
Last Updated : 29 May 2015 09:51 AM

சாலைப் பணிகளுக்கு ரூ.3.5 லட்சம் கோடி: நிதின் கட்கரி அறிவிப்பு

பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடுவதற்காக மத்திய அரசு ரூ. 3.5 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை அடுத்த 6 மாதத்தில் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் சாலை, கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் உருவாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

பாஜக அரசு பதவியேற்று ஓராண்டை பூர்த்தி செய்துள்ள நிலையில் தமது துறையின் ஓராண்டு செயல்பாடுகள் அடங்கிய மலரை வெளியிட்டதோடு, அதன் இணையதள பதிப்பையும் வெளியிட்டு செய்தியாளர்களிடம் அவர் பேசியது:

ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான 8 ஆயிர கிலோ மீட்டர் தூர நெடுஞ்சாலைப் பணி திட்டங்கள் தவிர இப்புதிய திட்டங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

கட்டமைப்பு வசதிகள்தான் பொருளதார வளர்ச்சிக்கு அடித் தளம் என்று, அதை முடுக்கி விடும்படி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வலியுறுத்தி யதாகவும், அதை செயல்படுத்தும் விதமாக அடுத்த 6 மாதங்களில் ரூ. 3.5 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன என்றார்.

மத்தியில் பாஜக அரசு பதவியேற்றபோது நெடுஞ்சாலைத் துறை மீதான நம்பிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இப்போது அரசு, தனியார் பங்களிப்போடு நிறைவேற்றப்படும் பிபிபி திட்டப் பணிகளில் தனியார் முன்வருகின்றனர். அந்த அளவுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

37 ஆயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கான 1,231 திட்டப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன என்று அவர் கூறினார்.

முந்தைய காங்கிரஸ் தலைமை யிலான அரசு பதவியில் இருந்த போது தினசரி 3 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை போடப்பட்டது. இது தற்போது 13 கி.மீ.அளவுக்கு அதிகரிக்கப்பட்டதுள்ளது. இரண்டு ஆண்டுகளில் நாளொன்றுக்கு 30.கி.மீ. தூரம் போடப்பட வேண்டும் என்பதே இலக்கு. அதை விரைவில் எட்டி விட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களை இணைக்கும் 1,100 கி.மீ.தூர நெடுஞ்சாலை இணைப்பு பணிகள் ரூ. 11 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார். திறன் மிக இளைஞர்களை உருவாக் கும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறைகளுடன் திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ள தாகவும் குறிப்பிட்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x