Last Updated : 28 May, 2015 09:52 AM

 

Published : 28 May 2015 09:52 AM
Last Updated : 28 May 2015 09:52 AM

சொகுசு பஸ்கள் தயாரிக்கும் நிறுவனமான டெய்ம்லர் சென்னையில் தொடக்கம்

சொகுசு பஸ்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டெய்ம்லர் நிறுவனம் தனது ஆலையை சென்னையை அடுத்த ஒரகடத்தில் தொடங்கியுள்ளது. ரூ. 425 கோடி முதலீட்டிலான இந்த ஆலையின் உற்பத்தி நேற்று தொடங்கப்பட்டது.

ஜெர்மனியில் உள்ள ஸ்டட் கார்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெய் ம்லர் நிறுவனத்தின் துணை நிறுவனமாக டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெகிகிள் நிறுவனம் (டிஐசிவி) செயல்படுகிறது. இந்த ஆலையின் செயல்பாடுகளை தாய் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர் டாக்டர் உல்ப்காங் பெர்ன்ஹார்ட் தொடங்கி வைத்தார்.

இந்த ஆலை ஆண்டுக்கு 1,500 பஸ்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது படிப்படியாக 4 ஆயிரம் பஸ்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று பெர்ன்ஹார்ட் கூறினார். மொத்தம் 27.91 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ள இந்த ஆலை ஒருங்கிணைந்த ஆலையாகும்.

இந்த ஆலையில் இந்நிறுவனம் செய்ய உள்ள மொத்த முதலீடு ரூ.4,400 கோடியாகும். இங்கு மெர்சிடெஸ் பென்ஸ் மற்றும் பாரத் பென்ஸ் என்ற இரு பிராண்டுகளில் பஸ்கள் தயாரிக்கப்பட உள்ளன.

பாரத்பென்ஸ் பஸ்களில் முன்பக்க என்ஜின் இருக்கும். குறுகிய தூர பயணங் களுக்காக இந்த பஸ் வடிவமைக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும், அலு வலக பணியாளர்களுக்கும் இது ஏற்றது. பின்புறம் என்ஜின் பொறுத் தப்பட்ட மெர்சிடெஸ் பென்ஸ் பஸ்கள் சொகுசு ரக பஸ்களாகும். இது நகரங்களுக்கிடையிலான போக்குவரத்துக்காக தயாரிக்கப் படுகிறது. புதிய ஆலையில் 9 டன், 16 டன் மற்றும் 16 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட பஸ்கள் தயாரிக்கப்பட உள்ளன.

ஏற்கெனவே இந்த ஆலையில் 20 ஆயிரம் பாரத்பென்ஸ் டிரக்கு களை விற்பனை செய்துள்ளது. இதில் 2 ஆயிரம் டிரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

புதிய பஸ் ஆலை தொடங் கப்பட்டதன் மூலம் 1,300 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை ஆலையில் தற்போது 3 ஆயிரம் பேர் பணி புரிவதாகவும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மார்கஸ் விலிங்கர் தெரிவித்தார்.

டெய்ம்லர் இந்தியா நிறுவனம் அயர்லாந்தைச் சேர்ந்த ரைட்பஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பஸ் ஆலையை அமைத்துள்ளது.

இந்த பஸ் ஆலை முழுவதுமாக ரைட்பஸ் நிர்வாகத்தால் நிர்வகிக் கப்படும். இதில் உள்ளூரில் தயாராகும் பொருள்கள் 90 சதவீதம் வரை பயன்படுத்தப்படும். பென்ஸ் பஸ்களில் உள்ளூர் உதிரிபாகங்கள் 75 சதவீத அளவுக்குப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் அனைத்தும் இந்தியா வுக்காக இந்தியாவில் தயாராவதாக டெய்ம்லர் பஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ட்முட் ஷிக் தெரிவித்தார். இந்திய சந்தையில் 8 டன் பஸ்களின் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங் காக அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இடது பக்க இயக்க செயல் பாடு உடைய பஸ்களை இந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண் டிலிருந்து வளைகுடா நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைவர் மார்க் லிஸ்டோசெலா தெரிவித்தார்.

சுரங்கத் தொழிலுக்குத் தேவையான வாகனங்களையும் நிறுவ னம் தயாரிக்க உள்ளதாக அவர் கூறினார். இந்த ஆலையில் பஸ், டிரக்குகள் மற்றும் மூன்று பிராண்டுகளான மெர்சிடெஸ் பென்ஸ், பாரத் பென்ஸ், பியூஸோ ஆகியவற்றுக்கான இன்ஜின்களும் தயாரிக்கப் படுகின்றன.

இந்தோனேசியா, கென்யா, நேபாளம், தான்சானியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு இங்கி ருந்து வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x