Published : 09 May 2015 10:10 AM
Last Updated : 09 May 2015 10:10 AM

பி.என்.மனோகர் - இவரைத் தெரியுமா?

$ மணிபால் குழும நிறுவனமான ஸ்டெம்பியூடிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2010-ல் இருந்து இந்தப் பொறுப்பை வகிக்கிறார்.

$ மணிபால் குழுமத்தில் 2002-ல் பணிக்குச் சேர்ந்தார். 2007-ல் ஸ்டெம்பியூடிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார்.

$ இடைப்பட்ட காலத்தில் மணிபால் யுனிவர்சல் லேர்னிங், குளோபர் நர்சிங் புரோகிராம் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

$ திருச்சிராப்பள்ளி மண்டல பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டமும், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியலில் உயர்கல்வியும் முடித்தவர்.

$ மணிபால் குழுமத்துக்கு முன்னர் விப்ரோ ஜிஇ மெடிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் பனிரெண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ லூகாஸ் டிவிஎஸ், டபிள்யூ.எஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x