Last Updated : 04 Apr, 2015 10:22 AM

 

Published : 04 Apr 2015 10:22 AM
Last Updated : 04 Apr 2015 10:22 AM

சொகுசு கார் விற்பனையில் ஆடி முதலிடம்

சொகுசு கார்களின் விற்பனையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம் முதல் இடத்தில் இருக் கிறது. தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக முதல் இடத்தில் ஆடி இருக்கிறது.

2014-15-ம் நிதி ஆண்டில் 11,292 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 11.51 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. 2013-14-ம் நிதி ஆண்டில் 10,126 கார்கள் விற்பனை ஆனது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2014-15ம் நிதி ஆண்டில் 11,213 வாகனங்களை விற்பனை செய்தது. அதற்கு முந்தைய நிதிஆண்டில் 9,458 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் பத்து புதிய மாடல் கார்களை ஆவலுடன் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோ கிங் தெரிவித்தார்.

அடி நிறுவனம் புதிதாக குவஹாத்தி, ராஞ்சி மற்றும் பெங்க ளூரு ஆகிய இடங்களில் புதிய விற்பனை மையத்தை உருவாக்கி இருக்கிறது. மொத்தமாக 39 விற்பனை மையங்கள் இந்த நிறு வனத்துக்கு உள்ளன.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x